(Reading time: 5 - 9 minutes)

பயணங்கள் முடிவதில்லை - 05 - சென்னையில் முதல் நாள் !!!! - பிந்து வினோத்

Chennai

சென்னை

சாப்பிட்டு முடித்து, பேசி, பேசி வீடு வந்து சேர மிட் நைட் தாண்டி போனது!

பெரியவளுக்கு லேசாக ஜூரம் அடிப்பது போல இருந்தது. உடனே கொடுக்க கையில் கிட்ஸ் பாரசிட்டமோல் இல்லை. எனவே அவளை தூங்க சொல்லி விட்டு காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.

குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது, கையில் அவர்களுக்கு தேவைப்படும் இது போன்ற மருந்துகளை வைத்துக் கொள்வது நல்லது!

நம்மால் எடுத்து வர முடியவில்லை என்றால் உறவினரிடம் வாங்கி வைக்கவாவது சொல்லலாம்!

இது இந்த பயணத்தில் நான் மிஸ் செய்த ஒரு விஷயம்!

ஆனால் என் அனுபவத்தில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம்!

இதை சொல்லிவிட்டு படுத்தேனோ இல்லையோ, அவ்வளவு தான் நான் ‘கொர்’...

பின்னே வேற என்ன செய்ய? தூங்கியே 2 நாள் ஆகி இருந்தது. கூட எக்ஸ்ட்ராவாக தலை வலி வேறு!

காலையில் எழுந்தப்போது நல்ல தூக்கத்தின் பயனாக ஃபிரெஷாக உணர முடிந்தது.

பெரியவளின் உடல் வலி & ஜுரமும் என் அத்தையின் கை வைத்தியத்தில் குறைந்து போயிருந்தது.

ஆனாலும் முன் தினம் கற்றுக் கொண்ட பாடத்தினால் அவளுக்கு வேண்டிய ஜூர மருந்தையும் வாங்கி வைத்துக் கொண்டேன்.

அன்றைய நாளுக்கான ப்ளானில் முதலில் இருந்தது ஆதார் கார்ட் ரெஜிஸ்ட்ரேஷன்!

காலை உணவை முடித்துக் கொண்டு தயாராகி ஆதார் ரெஜிஸ்ட்ரேஷன் செய்யும் மையத்திற்கு சென்றோம்.

அங்கே டோக்கன் வாங்கி, ஃபார்ம் ஃபில் செய்து முடிப்பதற்குள் வேர்வையில் நனைந்து போனோம்!

ஒருவழியாக அந்த போட்டோ & விபரங்கள் சரி பார்க்கும் பகுதியை அடைந்தோம்.

அங்கே, மொத்தம் நான்கு பேர் இருந்தார்கள். நால்வருமே முன் இருபதுகளில் இருக்கும் இளைஞர் / இளைஞிகள் தான்!

ஆனால் ஏன் வேலை ‘சீரியலா’க நடக்கிறது என்று புரியவில்லை.

நாங்கள் எங்கள் விபரங்களை கொடுத்த இளைஞர், அவரே விபரங்களை சரி பார்த்து, ஐடி ப்ரூஃப் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு, போட்டோவும் பிடித்தார்.

அவர் இதை செய்து முடிக்கும் வரை நான்காவதாக இருந்த இளைஞி காத்துக் கொண்டிருந்தார். இவர் எங்களின் வேலையை முடித்த உடன், அவரிடம் ப்ளாஷ் போன்ற அந்த ஒன்றை பிடிக்க சொல்லி விட்டு, அங்கே காதிருந்த மற்ற நபருக்கு புகைப்படம் பிடித்தார்கள்.

இது நடக்கும் போது இரண்டு பேர் ஃப்ரீயாக இருந்தார்கள். ஒருவர் போன் பேசிக் கொண்டிருந்தார், மற்றவர் சுமமவே இருந்தார்! அது ஏன் என்றும் புரியவில்லை!

பெரிய அளவில் தாமதம் ஆனது என்றெல்லாம் இல்லை. ஆனால், இருவர் மட்டும் என்றாலும், அவர்களே தனி, தனியே வேலை செய்தால், வேலைகள் ‘பாரலலா’க செல்லும், இன்னும் கொஞ்சம் வெயிட் டைம் குறையும்!

இப்படி நான் படித்த ‘ஆபரேஷன் ரிசெர்ச்’ மூளை கணக்குகள் செய்தாலும், எனக்கு என்னவோ அவர்கள் நால்வரையும் பார்த்து பாவமாக தான் இருந்தது.

சென்னையின் கோடைக்காலம் உச்சியில் இருக்கும் காலம்! அந்த அறையில் ஒரு பழைய ஃபேன் தவிர சின்னதாக ஒரே ஒரு ஜன்னல்!

காலை முதல் மாலை வரை அதே அறையில் இப்படி கூட்டத்தின் நடுவே இருந்து பலரின் புலம்பலை கேட்டபடி ஒரே வேலையை செய்ய வேண்டும்!

அதுவும் பிழைகள் இல்லாமல் செய்யி வேண்டும்!

பாவம் தான்!

ஒரு சில நிமிடங்கள் அதிகமானால் தவறில்லை! அவர்களுக்கும் ஓய்வும், கொஞ்சம் ரிலாக்சேஷனும் தேவை தானே!

எனவே ‘பெரிய’ மனதுடன் நான்கு பேரையும் மன்னித்து விட்டு ஆதார் ரெஜிஸ்டர் செய்தததற்காக தந்த பிரின்ட் அவுட்டுடன் வெளியே வந்தோம்.

தற்கு மேல் ஃப்ரீ டைம் எல்லாம் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்!

எங்களின் ப்ளான் படி அடுத்த நாள் இன்டிகோ விமானத்தில் திருவனந்தப்புரம் நோக்கி பயணம்! அங்கிருந்து டாக்ஸியில் கன்னியாக்குமரி மாவட்டத்தில், மார்த்தாண்டம் அருகே உள்ள ‘அருமனை’ எனும் கிராமம் (or  பேரூராட்சி) நோக்கி பயணம்!

சோ உடனே நான் கொண்டு வந்திருந்த ஆறு பெட்டிகளை கிண்டி, கிளறி ஊருக்கு கொண்டு செல்ல வேண்டிய உடைகளை எடுத்து தயார் செய்ய வேண்டும்!

பிறகு, அந்த பெட்டியையும் எடை பார்க்க வேண்டும்!!!!

கேட்க போராக / கண்ணைக் கட்டுவதாக தோன்றினாலும் அதை தான் செய்தேன்...!

மூன்று பேருக்கும் வேண்டியதை தேடி எடுத்து அடுக்கி முடித்த போது நேரம் மிட்நைட் தாண்டி இருந்தது!

ஆனாலும் சின்ன வயது முதலே அது என்னவோ ஊருக்கு போவது என்றாலே ஒரு தனி குஷி தான்!

அதனால் பெரிதாக அலுப்பு தெரியவில்லை!

நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து நாங்கள் தயாரான போது என் அக்காவும், அவளின் மகனும் கூட வந்து சேர்ந்தார்கள்.

ஸோ, நான் & என் 2 குட்டீஸ், என் அத்தை, மாமா, என் அக்கா & அவள் மகன் என சின்ன படையாக சென்னை டொமஸ்டிக் ஏர்போர்ட் நோக்கி காரில் சென்றோம்.

ஏர்போர்ட் பார்க்கிங்கிலேயே கையில் கொண்டு வந்திருந்த டிஃபனை முடித்து விட்டு உள்ளே சென்றால்....! அங்கே ஒரு அருமையான அனுபவம் எங்களுக்கு காத்துக் கொண்டிருந்தது!!!

அதை பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

 

பயணம் தொடரும்...

Episode 04

Next episode will be published on 9th Aug. This series is update weekly on Wednesdays.

 {kunena_discuss:1127}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.