(Reading time: 1 - 2 minutes)

 

டெல்டா பொங்கல் 

சர்க்கரை வள்ளி கிழங்கு வந்தது
சர்க்கரை கரும்பு இனிப்பாக வந்தது
சர்க்கரை பொங்கல் பொங்க வெல்லம் வந்தது
சீமை அவரை சிலிர்புடன் சிரித்தது
கொத்து மஞ்சளூம் மஞ்ச பூசனீயும்
மங்கல காட்சி கொடுத்தது
எங்கே ? எல்லாம் எங்கள் ஊர் சந்தையில் !
இதனுடன் தொலைக்காட்சியீல் அமைச்சர்களின்
பொங்கல் வாழ்த்தும் வந்தது ! என்ன புன்னியம் ?
எதனால் ? எல்லாம்
எங்கள் வயல் வெளியில் நெற்கதிர்கள் கூனி குறுகியது !
எங்கள் கண்களீருந்து ஆடிபெருக்கென கண்ணீர் பெருகியது
இதுவே எங்கள் டெல்டா பகுதி விவசாயியின் பொங்கல் !!
”பொங்கலோ பொங்கல்” இல்லை இன்னொரு
”தண்ணீர் தண்ணீர்” என்கிற நிஜகதை !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.