**பொலிவு பொங்கும் புத்தாண்டு ** - கஜலக்ஷ்மி
புதிய ஆண்டு வருகிறாள்
பூச்சுடி வருகிறாள் !
புன்னகை மிளிர வருகிறாள் !
புத்துனர்வு பகிர வருகிறாள்
குழப்பக்கங்கள் அகற்ற வருகிறாள் !
நன்மை தீமை புரியவைக்க வருகிறாள் !
நம்பிகை நவில வருகிறாள் !
வாழ்வில் வெளிச்சம் தர வருகிறாள் !
வெற்றிக்கனியை பரிசளிக்க வருகிறாள் !
என்று நித்தம் நம்புவோருக்கு புதிய ஆண்டு
பொலிவு பொங்கும் ஆண்டு என்பது நிதர்சனம் **