இயல்பு
நான் மின்மினிப் பூச்சியைப் போல
மின்ன விரும்ப வில்லை
நான் சூரியனை போல
சுட்டெரிக்க விரும்ப வில்லை
நான் நிலவை போல
குளிர்விக்க விரும்ப வில்லை
நான் நட்சத்திரத்தை போல
ஜொலிக்க விரும்ப வில்லை
நான் நானாக மட்டுமே
இருக்க விரும்புகிறேன்
என் இயல்புகளை
இழக்க விரும்ப வில்லை