(Reading time: 1 - 2 minutes)

அடையாளம்- கவிதை போட்டி - 13 - மது

இம்முறை நிச்சயம் பெண்மகவு பிறக்கும்

இனிய வாழ்த்துக்களுடன் உறவினர் நண்பர்கள்.

தள்ளாடும்  வயதில்  தாயென  மடி தாங்கும்

தெய்வத் திருமகள் வேண்டி தவமிருக்கும் தந்தைகள்.

 

வீரமும் விவேகமும் அன்பும் பண்பும்

பெண்ணுக்குச்  சமமான  படிப்பும் பதவியும்

சமையலில் தேர்ச்சியும்  சகிப்பும்  பொறுமையும்

கொண்டிருப்பவனுக்கே  “மாப்பிள்ளை” தேர்வில்  முதலிடம்.

 

வேலைக்குச்  செல்லும் மருமகளுக்குச் சிரமம்

மாமியார் மாமனார்  மகிழ்ச்சியுடன்   உதவிக் கரம்

சீராட்டல்  பாராட்டல், மகன்  அங்கே இரண்டாம்  பட்சம்

மறுபிறவியில்  பெண்ணாகப் பிறக்க வேண்டினான் வரம்.

 

விடியல்  என்றால்  இரவு  வரும் ; அதில்  நிலவும்  வரும்.

வெற்றிப்பாதையில்  தடைகள் இடறும் ; அதுவே படிகளாக மாறும்.

 

நாணயத்திற்கு இருபக்கம்; முன்னேற்றமும் சமவிகிதம்.

பூவின்  மென்மையுடன்  நன்மையை  பாராட்டும்  தன்மையும்

தலையின் ( சிங்கம்) தீரத்துடன்  தீமையை எதிர்கொள்ளும் திறமையும்

இன்றைய  பெண்மையின் “ தனித்துவ  அடையாளம்” .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.