(Reading time: 1 minute)

பெண்மை - கவிதை போட்டி - 20 - மது

நான்

         உன்னிலிருந்து ஜனித்தவள்

         உன்னையே உருவாக்கியவள்

 

என்னிடமே

         வஞ்சக எண்ணங்கள்

         வன்மச் செயல்கள்

 

நானும் நீயும்

           தண்டவாளத்தின் இரு தடங்கள்

           இணைந்தே பயணம் - இதுவே இயற்கையின் நியதி !!

 

சேதம் பெண்மைக்குத் தான்  

           என்ற போதும் தடம் புரண்டு அழிவது

           மொத்த  "மனித குலமுமே" - இதுவே  பரிணாம விதி!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.