(Reading time: 2 - 3 minutes)

சுதந்திர தினம் - மது

இந்திய திருநாட்டின் சுதந்திர தினம்

இன்றைய தலைமுறை எவ்வாறு கொண்டாடும்???

இதோ ஒரு முன்னோட்டம்!!!

 

பள்ளியில் பாட்டுப் போட்டி மாறுவேட போட்டி

பரபரப்பாய் வரிசையிட்டாள்

பக்கத்து வீட்டுச் சுட்டி!!!

 

வெள்ளியும் சேர்ந்து  மூன்று நாள் விடுமுறை

வெகுநாளாய் ஆசைப்பட்ட சுற்றுலா - தோழிக்கு

வெற்றியாகுமா   இம்முறை!!!

 

முக்கிய திட்டத்தின் இறுதித் தருணம்

மென்பொருள் வல்லுநர் நண்பன்

மொழிந்தான் வேலைக்கே முதலிடம்!!!

 

பாப்பையா பட்டிமன்றம் புதுப்படம்

பார்த்துக் கொண்டே அன்றாட சமையல்

பாதிப்பொழுது  சகோதரிக்கு ஓடிவிடும்!!!

 

சுதந்திரத்தின்  அருமை இவர்களுக்குத்   தெரியவில்லை!!!

சிந்திய ரத்தத்திற்கு இன்றைய இளைஞரிடம் மதிப்பில்லை!!!

சாடும் சான்றோரே!!! கேளுங்கள்!!!

 

மழையால் நிலச் சரிவா! புயலால் அழிவா!

மீட்புப் பணிகளில் விரைந்து தோள் கொடுத்தோம்!!!

 

எல்லைக்குச் சகோதரனையும் கணவனையும்

மகிழ்ச்சியோடு வழி அனுப்பி வைத்தோம்!!!

 

முகநூல்,  இணையதள  பதிவுகளால்

மிக முக்கிய நிகழ்வுகளுக்கு வித்திடோம்!!!

 

தீவிரவாத தாக்குதல்கள் குண்டு வெடிப்புகள்

தலை நிமிர்ந்து தீரமாக எதிர் கொண்டோம்!!!

 

அமெரிக்க டாலருக்கு உழைத்தாலும்

அனைத்தையும் ரூபாயாய் சேமித்தோம்!!!

 

அன்றாடம்   அன்னைக்கு நன்றியா  சொல்கிறோம்

ஆனாலும் உள்ளத்தில் தெய்வமாய் வணங்குகிறோம்!!!

 

இந்திய தாய் அறிவாள் தன் மக்கள் பாசம்

இளைய தலைமுறையின்  பகட்டில்லா நேசம்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.