(Reading time: 1 - 2 minutes)

தாய் மனம் - மது

earth

பச்சை பட்டாடை துகிலுரித்து

பாவை மேனியை ரணமாக்கி

சகோதர உயிர்களுக்கு சமாதி கட்டி

சுகவாசியாக வாழும் மானிடா!!!

 

செல்லப் பிள்ளை நீ, உன் மேல் சினம் கொள்வாளோ!!

சீற்றம் கொண்டு தாயவள் உன்னை அழிக்க நினைப்பாளோ!!

 

ஆற்றாமையில்  அவள்  வடிக்கும் கண்ணீர்

அபாயமாய் உயர்கின்றது  கரிக்கும் கடல் நீர்

 

புண்பட்டதால் அவளையறியா வலி நடுக்கம்

பலமான அதிர்வுடன் அடிக்கடி  பூகம்பம்

 

தன் மற்ற செல்வங்களை இழந்த உள்ளக் குமறல்

தீப்பிழம்பாய் வெளியேறும் எரிமலைகள்

 

இன்னல்கள் பல நீ கொடுத்தும்

இன்முகம் மாறாமல் தாங்கும் தெய்வம்

பிழைகள்  நீ செய்த போதும்

பழி  தன்மேல் ஏற்றுக் கொண்ட தாய்மனம்

 

அண்மையில் பேரழிவு   ஏற்படுத்திய  பூகம்பத்தின் அதிர்வுகளை நானும் உணர்ந்தேன்... இயற்கையின் சீற்றம், இயற்கை அன்னையின் அகோர  களியாட்டம் , பொறுமையை இழந்து விட்டாள் பூமித் தாய் எனப் பல விமர்சனங்கள். தான் அழிந்தாலும் காப்பவள் தாய் அல்லவா..அவளை இவ்வாறு தூற்றுதல் முறையா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.