(Reading time: 1 minute)

உயிர்த்தெழு!!! - மது

phoenix

சூரியனும் தான் மறைகிறான்

நிலவும்  கூட தேய்கிறாள்

முகிலும் வறண்டு வாடுகிறான்

நிலமும் நலிந்து போகிறாள்

 

மறைவதும் தேய்வதும்

வறட்சியும் நலிவும் இயற்கை சுழற்சி

 

மறையும் சூரியன் மீண்டும் உதிப்பதில்லையா

தேய்ந்த நிலவு மீண்டும் வளர்வதில்லையா

வறண்ட முகில் மழை மேகமாய் பொழிவதில்லையா

நலிந்த நிலம் பூஞ்சோலையாய் மிளிர்வதில்லையா

 

மனிதா!!!

துன்பம் தோல்வி சோதனை வேதனை

ரணகளமாய் காயப்பட்டு உள்ளம் மரித்த போதும் 

நம்பிக்கை துடிப்பு வைராக்கியம் தைரியம்

பீனிக்ஸ் பறவையென புதிதாய் உயிர்த்தெழுவாய் நீயும்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.