காதலுக்கு ஓர் வரேவற்பு - சகி

அன்புடன் வரவேற்கிறேன்..!
அதிகாலை சூரியனுக்கு பதிலாய்
உன் முகம் காணத் துடிக்கும் இதயத்தை அன்புடன் வரவேற்கிறேன்!!
சிணுங்க நான் உறங்கும் சமயம்
காதோரம் உன் இதழ் அளிக்கும்
சீண்டலான வார்த்தைகளை வரவேற்கிறேன்...!
விழிகளைத் திறக்கும் நேரம்
மென்மையான உன் புன்னகையை வரவேற்கிறேன்...!
காலை கனவுகளை எடுத்து கூறும்போது மலரும் எழில் நாணத்தை வரவேற்கிறேன்...!
மனதில் உள்ள காதலை எல்லாம்
பொய் கோபத்தோடு நீ கடிந்து வெளிப்படுத்தும் அழகை வரவேற்கிறேன்..!
சற்றும் சளைக்காமல் எனக்காய் நீ செய்யும் உதவிகளை வரவேற்கிறேன்..!
சோர்ந்து நானும் வீடு வருகையில்
சேர்த்துக் கொள்ளும் அணைப்பினை வரவேற்கிறேன்..!
மாலை நேரம் மனதின் தேடல்கள் யாவும் தீரும் பொழுதினை வரவேற்கிறேன்..!
மனதின் ஓரம் தோன்றும் தனிமையை விலக்கும் பெண்மையை வரவேற்கிறேன்...!
ஏங்கி நான் கேட்கும் சமயம் 'விழிகளை அடைப்பாய்'என்ற மொழிகளை வரவேற்கிறேன்..!
விரல்களின் நுனியில் உன் விரல் தீண்டல்களை வரவேற்கிறேன்..!
கண்ணீரை என் நெஞ்சில் கரைக்கும் உரிமையை அன்புடன் வரவேற்கிறேன்..!
ஆறுதலை நான் தேடும் சமயம்
எனக்கென துடிக்கும் இதயத்தை வரவேற்கிறேன்..!
எனக்கென உரிதான சீண்டல்களை
நொடியும் வரவேற்கிறேன்...!
அதில் உனக்கென எனது அச்சத்தினை
இக்கணமே சமர்ப்பிக்கிறேன்..!
திருமண நாளை மறந்துப் போகும் நினைவினை வரவேற்கிறேன்..!
அன்று,அமைதிப்படுத்தும் உக்திகளை பரிசோதிக்கிறேன்..!
காரணமின்றி வெளிப்படுத்தும் சினத்தினை வரவேற்கிறேன்..!
அதில்,வெளியாகும் காதலை வழி மொழிகிறேன்..!
தேவையை தேவையோடே தொலைத்து விடுகிறேன் என் தேவையை நீ தேடும் பதற்றத்தை வரவேற்கிறேன்..!
சீதையும் இராமனும் உத்தம தம்பதியர் என்னும் கூற்றினை வரவேற்கிறேன்..!
அங்கு நீ மறந்த நம் காதலை எண்ணி புன்னகைக்கிறேன்..!
சதி மீதான ஹரனின் அன்பினை வரவேற்கிறேன்..!
நீ மறந்த என் காதலை எண்ணி சினம் கொள்கிறேன்..!
என்றும் எனக்காக வாழ்வாய் என்ற சபதத்தை வரவேற்கிறேன்..!
உனக்காக என் வாக்கினை மனதோடு எழுதிக் கொள்கிறேன்...!
நித்தம் எனக்காக வாழும் உன் காதலை வரவேற்கிறேன்...!!!
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.