(Reading time: 2 - 4 minutes)

உதிரும் நினைவுகள்... - ப்ரியா

Memories

உனக்கு  மட்டுமே சொந்தம்

என்றிருக்க முடியும் ஆனால்

உனக்காய் வந்த என்னை

உறைவிடம் விட்டு செல்லும்படி கேட்பாய்..

 

என்னை உன்னில் தொலைக்கும் முன்

உன் மனம் எனதென

கொண்டாட்டம் தொடங்கும் முன்..

சொல்லில் சுரங்கம் அமைத்து

வழியை நான் தேடும் முன்..

 

பொழுது சிறிது தான் எனினும்

திமிருடன் இருந்தாய்.!!

தொடங்கிய அனைத்தும் தடைகளை உணர

குளிர் காய தொடங்கியது

என் பொறுமை..

 

உன் நெஞ்சம் குளிர

நான் கொண்ட வெறுமை..!!

 

உன் பொறுமை உடைந்து நொறுங்கும் 

ஓசை உளமார நான் கேட்க வழி செய்தது

என் நெஞ்சம் உடையாமல் காக்க

நினைத்து தோற்ற உன் வார்த்தைகளின் வீரியம்..!!

 

உன்னை எதிர்த்து நீ சண்டையிடுகையில்

எனக்குள்ளே நான் தோற்று போயிருந்தேன்..

 

எண்ணங்கள் மரத்து வெற்றிடத்தில் நிழலாடிய

உன் நினைவும் விதிவிலக்கின்றி கரைந்தபடி.. 

 

உணர்வுகளை உள்ளடக்கிய உன் மௌனம்

முயற்சிகள் ஒவ்வொன்றாக

தோற்ற என்னுள் ஆறாத ரணம்..

 

காதல் என்றால் கடந்திருப்பேன்

நட்பென்றாலும் நெகிழ்ந்திருப்பேன்..

நடை பிணமாய் நகர்ந்து கொண்டிருகிருக்கிறது

காலம் நம் இருவருக்கிடையே!!

 

என்னை குறை கூறி என்ன பயனடா

தொடக்கமும் எனது அல்ல

முடிவும் எனதாவதும் அல்ல..

 

என்னோடான உன் உணர்வுகளை

நான் அறியா இந்நேரம்..

உதிர்ந்த பூக்களாய் உன் நினைவுகள்

காற்றின் பிறப்பில் கை நழுவும் முன்னே

காலத்தின் பொக்கிஷமாய் சேமிக்கிறேன்..!!

 

உதிர்ந்த பூக்களும் வாசம் பேசும் என்னில்

உதிர்ந்த இடங்களினின்று மறுபடி பூக்கும்...

 

உன் மகிழ்ச்சி கண்டு மலர்ந்து உதிர

காத்திருக்கும்  என் புன்னகை..!!!

 

ஷக்தி எழுதிய "உதிரா பூக்கள்" எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் உடனடி வெளிப்பாடே இந்த கவிதை.. சில்சீ -க்கு வந்து மாதங்கள் ஆனா போதும், மருகி நான் இருந்த போதும்.. இந்த தலைப்பை என் முகபுத்தக பக்கத்தில் பார்த்த உடனே படித்து விட்டேன்.. தலைப்பும் படமும் போதுமானதாய் இருந்தது என் ஆர்வத்தை தூண்ட, அருமையான கவிதை பேருதவியாய் இருந்தது இயலவில்லை என ஒதுக்கி வைத்த என் எழுத்தார்வத்தை உந்தி தள்ள, எழுதிய உடனே பகிர்ந்து கொண்டு விட்டேன்.. நன்றி ஷக்தி.. நன்றி சில்சீ..

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.