(Reading time: 1 minute)

நீ.. நான்.. - ப்ரியா

 

நீ.. நான்...

நமக்குள் இல்லை எதுவும்..

கோபம்..காதல்..

ஆசை.. மோகம்..

சண்டை..சிணுங்கல்..

 

நீ.. நான்..

நடுவில் வெறுமை..

இல்லை பசி.. உணவு?!

இல்லை தூக்கம்.. இரவு?

இல்லை இன்பம்.. நினைவு?

இல்லை உணர்வு... மனது?

 

நீ.. நான்..

இருவர் இனி எங்கே?

வெற்றிடம்.. சூனியம்..

ஆழ்நித்திரை.. மெல்லிய திரை..

இருட்டு.. குளிர்ச்சி..

அடர்ந்த மறுப்பு...

 

நீ.. நான்...

பிரிவு.. பரிவு?!

மோதல்.. காதல்?!

வம்பு.. அன்பு?

பிடிவாதம்.. ஆசாபாசம்?

 

நீ.. நான்..

நிலவின் முதுகு

அவ்வளவு அன்பு.!!

கடலின் ஆழம்

உறைந்த உரிமை..!!

மின்மினி ஒளி

செயற்கையற்ற நேசம்..!!

 

நீ... நான்...

உவமைகள் இல்லை..

அன்பியலின் எல்லை...!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.