(Reading time: 1 minute)

அவனும் நானும் - 09 - என் ஆத்ம பலம் நீ..!! - ப்ரியா

Hands

இருள் சூழ்ந்த பகலிலும்

இமை மூடா இரவிலும்..

இதயம் நொறுங்க நான்

அழுத இன்னபிற நிலையிலும்...

தாங்கி பிடிக்குமென நம்பி ஏமாந்து

நானும் தடுமாறி விழுந்து

தடம் மாறிய பொழுதிலும்...

தகுந்த இடம் ஒன்றில்லாமல்

சூன்யமான வாழ்விலும்..

மீதமிருந்த ரத்த துளிகளின்

நம்பிக்கை திரட்டி

நல்வழி நோக்கி என்னை

நடத்திச் செல்லும் நல்லுயிர் நீ..

என்றும் என்னுள் அழியாமல் இருக்கும்

ஆத்ம பலம் கொடுத்ததடா

என்னை தூக்கி நிறுத்திய

என்னுயிர் சுமக்கும் உன் காதல்..

 

Avanum naanum - 08 

Avanum naanum - 10

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.