(Reading time: 1 minute)

அவனும் நானும் - 12 - நானும் நீ..!!! - ப்ரியா

Hands

என்னிலும் உன்னிலுமாய்

நிரம்பி வழியும் நீ

உன்னில் மட்டுமாய்

இல்லாமல் போனது ஏனோ?!

உயிர் ஒன்று உருவம் இரண்டாய்

உவமைக்கு இலக்கணம்

தினம் கண்ணாடி முன் நான்..!!

உன் கண்ணின் நாடி

துடிப்பின் முன் நான்..!!

அணையும் உயிரில்

உன் உயிரை தீட்டி

உன்னுருவை மெருகேற்றி

எனக்குள் பரவி படர்ந்த நீ..

உனக்குள் அமிழ்ந்து தொலைந்த நான்..!!

நாளும் பொழுதும் ஞாபகத்திலும் கூட

என்னை தேடும் இடங்களிலெல்லாம்

உன்னை நிரப்பி அழகு பார்க்கும்

அதிசயம் தானடா உன் காதல்..!!!!

Avanum naanum - 11

Avanum naanum - 13

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.