அவனும் நானும் - 11 - என்னை செதுக்கும் சிற்பி நீ - ப்ரியா
வலிக்கும் வார்த்தைகள்
என்னை வதைப்பதாய் இருந்தாலும்..
நீ அடிக்கும் அடிகள்
மௌனம் தான் ஆனால்
எனக்கு வலிப்பதாய் இருந்தாலும்..
சிறிதும் தாக்கமின்றி
தாக்கமில்லை என்பதாய்
நான் நடித்துக் கொண்டிருந்தாலும்..
கல்லாக இருந்த என் வளர்ச்சியை
மன முதிர்ச்சியை
கட்டி காத்து மெதுமெதுவாக
சிலை வடிக்கிறாய்...
ஓரிரு அடிகள் ஆங்காங்கே
ஓங்கி விழும் போதெல்லாம்
உயிர் வலியில் முகம் சுருங்குகையில்..
உன் உயிர் கொண்டு
மிருதுவாய் மருந்திடுகிறாய்..
முற்றிலும் புதுமையான ஒரு நான்..!!
உனக்காக மாறி நிற்கும் உன் நான்..!!
என்னை எனக்காகவே செதுக்கி
என்னிடமே ஒப்படைத்த
கைதேர்ந்த சிற்பியடா
என் மனம் மாற்றிய
உன் உயிர்க்காதல்..!!
{kunena_discuss:779}