(Reading time: 2 - 3 minutes)

விழித்தெழு பெண்ணே - கவிதை போட்டி - 18 - மீனா

             

அதியமானீடம் நெல்லிக்கனி பெற்று- அன்றே

ஆண் பெண் நட்பிற்கு வித்திட்டார் எங்கள் அவ்வை மூதாட்டி

ஆழ்வார்கள்  பன் இருவருள் - சுடி தந்த சுடர்க்கொடி

ஆண்டாளும் இடம் பிடித்தாள்.

 

வீரவாள் ஏந்தி வெற்றி முரசு

 கொட்டியவள் எங்கள்- ஜான்சிராணி

வெள்ளையனை வெளியேற்றி

வீர முழக்கம் இட்டவள் எங்கள்- வேலுனாட்சி

 

பரந்தாமனை தன்  பஜனை பாடல்களால்

பரவசபடுதியவள் எங்கள் பக்தை - மீரா

பரமசிவனின் கைலாயத்தை தன் கைகளால் கடந்து

பக்தியில் சிகரம் தொட்டார் எங்கள் - காரைக்கால் அம்மையார்

 

பெண்ணை நிலவென்பர் அன் நிலவை - சுற்றிவந்த

பெண் எங்கள்- கல்பனா சாவ்லா

பளு  தூக்கி ஒலிம்பிக்கில் நம்

பாரத பெருமை மீட்டாள் எங்கள்- அஞ்சனா ஜார்ஜ்

 

நட்பாய்,காதலாய்,வீரமாய்,

பக்தியாய், சாதனையாய்,சரித்திரமாய்

ஆண்டாண்டு காலமாய் வீற்றிருப்பது பெண்மை

 

அண்மையில் ஒரு சேதி கேட்டேன்

கல்லூரி பெண்கள் கருமுட்டை - விற்கின்றனராம்

காது கூட கூசுகிறது

காலி மது புட்டில்கள் பெண்கள் விடுதியில் உருள்கின்றதாம்

கன்னி பெண்ணின் கற்பு - இன்று

கைபேசியில்  விற்கப்படுகிறதாம்

 

ஆண் முறை தவறினால் பெண் அவள் மீடிடுவாள்

பெண்ணே முறை தவறினால் யார்  வந்து மீடிடுவர் ?

 

விழித்துக் கொள்ளும் எம் - பெண்ணினமே

வீறுகொண்டு எழுந்து வா புது சரித்திரம் படைப்போம்

மீண்டும் நட்பாய்,காதலாய்,வீரமாய்,

பக்தியாய், சாதனையாய்,சரித்திரமாய்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.