அம்மா - அனு.ஆர்
அன்பெனப்படுவது
ஆசைப்படும் அனைத்தையும்
கொடுப்பதாகாது.
அன்பெனப்படுவது
பொறுமை
பொறாமையின்மை
சினமின்மை
தீங்கு நினையாமை
தன்னை புகழாமை
தன் நன்மை நினையாமை
அது
வேதனை தாங்கும்
சோதனையில் துணைவரும்
எதையும் தாங்கும்
எப்பொழுதும் நம்பும்
நலம் நடக்குமென
நம்பி காத்திருக்கும்.
இவ்வுண்மையின் ஒற்றை
வார்த்தை
சுருக்கம்
அம்மா.