கொஞ்சம் தேவை - ஜான்சி
இளமை முழுதும்
களிப்பை மறந்து
வேலை களைப்பை மட்டும்
கண்டவர்கள்
முதுமையில்
ஓய்வும், மகிழ்வும் பெறாமல்
நோய், பிணியால் துன்புறுவதை
பார்க்கிறோம்.
ஆதலின்,
கொஞ்சம் ஓய்வும்
கொஞ்சம் உற்றார்,
நண்பர்களுடனான
இனிமையான நேரங்களும்
தேவை என்றே
உணர்வோம்
செயல் படுத்தவே
விழைவோம்.
{kunena_discuss:779}