(Reading time: 1 minute)

நீ கண்ணுறங்கு - ஜான்சி

neethi

நீதி தேவதையே
நீ கண்ணுறங்கு,

உன் மகள்கள்
கூக்குரல்கள்
உன் காதில் விழுந்து
உன் தூக்கம் கலைந்திடும்
இடர்பாடுகள் 
உனக்கு வேண்டாம்.
நீ கண்ணுறங்கு.

உன் மழலைகள்
சதைப் பிண்டமாய்
கசக்கி
முகர்ந்து
சுவாசம் நிறுத்தி
சாக்கடையில் கலக்கட்டும்.
நீ கலங்கிட வேண்டாம்
கண்ணுறங்கு.

பண பலம் படைத்தவன்
நாட்டை சூறையாடட்டும்
உன் துயில் 
துளியும் கலையாமலே
களைத்து
நீயும் கண்ணுறங்கு.

சில நாட்களாகட்டும்
எம் மாந்தர்
மண்ணோடு மண்ணாகும் 
வரை 
நீ முழித்திட வேண்டாம்.
கண்ணுறங்கு.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.