(Reading time: 1 - 2 minutes)

ஆண்(ழ்) மனம் - ஜான்சி

பெண்களை 
புரிந்துக் கொள்ள
முடியாதாம்..

அவர்கள் உள்ளம் 
ஆழ்கடலிலும்
ஆழமாம்.

இப்படியேச் சொல்லி
சொல்லி
ஆண்களே
எத்தனைக் காலம்
தான்
தம்மையே மறைப்பீர்?

அப்பா முசுடு
சிரிக்கவே தெரியாது
இது நாம்
வரையரைத்தது.

பிள்ளைகள் எதிர்காலம்
காக்க
கண்டிப்பின்
முகமூடி 
அணிந்து
அவர் தன்
சிரிப்பைத் துறந்ததை
இங்கே
யார் அறிந்தது?

அண்ணன் ஒரு கோழை
தங்கையைச் சீண்டியவனை
அறையாமல்,
ஏன்
மழுங்கியே போகிறான்?
இது உள்ளத்தில்
குமுறலாய் ஒலித்தது.

தன்மானத்தை விட
தங்கை மானமே பெரிது,
அமைதியாய் கண்காணிக்க
அடுத்து செயல்படாமல்
தடுக்க
நட்பு போர்வையே 
சிறந்தது 
எனும் அவன் 
உள்ளத்தின் உறுதியை
இங்கே
யார் அறிந்தது?

கோமாளி நண்பன்
நேரம் காலம்
தெரியாமல் பேசும்
முட்டாள் அவன்.
என கிண்டல்
செய்வது
நாம் அறிந்தது.

நண்பர் குழுவில்
இருவர் 
கோபம்
கொண்டேச் சூழல் 
கசப்பாய் மாறுகையில்
அனைவர்
கவனம் 
சிதறடிக்க
தன்னைத் தாழ்த்தி
அவன்
முட்டாளாய்
நிகழ்த்தும்
நாடகம் யார் அறிந்தது?

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.