(Reading time: 1 minute)

23. காதல் என்பது - ஜான்சி

Love is

தன் மனதை
பல நாளாய்
ஆளும் 
அவளை(னை)
உணர்ந்து,

அவள்(ன்) 
மனதில்
தன் இடத்தை
ஆராயும் இவள்(ன்) உள்ளம்.

கலர் கலராய்
எண்ணம் கொண்டே
கனவினில் தான் மிதக்க...

அவளி(னி)ன்
ஒரு புன்னகை,
ஒரு தலையசைப்பு
மட்டும் போதும்.

சளைக்காமல்
கற்பனைக் 
கோட்டைகளை
தான் செதுக்க...

அவளி(னி)ன்
ஒரு வார்த்தை,
ஒரு இனிய பதில்
போதும்.

இதுதான் காதலா?!!

Poem 22

Poem 24

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.