நிலாக் காதலி - ஜான்சி
நீரும் நீயும் ஒன்றாமோ?!!
எதனோடு கலக்கின்றாயோ
அதுபோன்றே தோன்றுகின்றாய்.
புல்வெளியோடுனைப் பார்த்தால்
பச்சையாய் பரவசப் படுத்துகின்றாய்.
அதிகாலை சூரியஒளிதனில் பார்த்தால்
இளமஞ்சளாய் இதயம் கவர்கின்றாய்.
அந்திச் சாயும் நேரம் உனைப் பார்த்தால்
ஆரஞ்சு வண்ணத்தில் ஆக்கிரமிக்கிறாய்.
கடல் பின்னணியில் உனைப் பார்த்தால்
வெள்ளையும் நீலமுமாய் நீண்டுச் செல்கிறாய்.
எங்கு உனை எவ்வாறு பார்க்க நேர்ந்தாலும்
விழி இமைக்காமல் பார்க்க வைத்து
நிலாக்காதலியாய் எனை எப்போதும்
மாற்றிச் செல்கின்றாய்.
{kunena_discuss:779}