நிறைவு - ஜான்சி
அன்று
இரு கை நிறைச் செல்லத்தை
கையேந்தி
பாலூட்டி
தோள் சாய்த்து
முகம் வருடி
முதுகை மெல்லமாய்
தான் தட்டி
செப்பு வாயின்
சின்னக் கொட்டாவியை
தான் ரசித்து
தூக்கம் கண்ணைச் சுழற்ற
தாய் கழுத்தை
மேலும் ஒண்டிக் கொள்ளுவதை
மெய்சிலிர்க்க
பார்க்கும்
போது அனுபவித்தறியாத
நிறைவை
இன்று
தூங்கு அம்மாவெனெச் சொல்லி
தலை வருடி
தட்டிடும் வகையறியாது
சற்றே வேகமாய்
முகம் தட்டும்
உன் அன்பில்
அடைந்துக் கொண்டேன்.
{kunena_discuss:779}