26. காதல் என்பது - ஜான்சி
உந்தன் வீட்டில் காதல் என்பது பாவம்,
என் வீட்டில் அதுவே பெரும் சாபம்.
காதலிப்பதும்,
காதலிக்கப் படுவதும்,
அங்கீகரிக்கப் படா பகுதிகளிலும்,
காதல் காதலிக்கப் படாமல்
ஏன் இருப்பதில்லை.?
காதலிப்பது மரணத்திற்குச் சமம்
என்றுத் தேரிந்த போதும்
காதலை மனிதன் ஏன் தவிர்ப்பதில்லை?
உயிர் கொடுத்த பெற்றோரே
கௌரவப் படுகொலைச் செய்யத்
துணிவர் என்றுத் தெரிந்தும்
காதலை விட்டுக் கொடுக்க
மனிதன் ஏன் துணிவதில்லை?
இதுதான் காதலா?
{kunena_discuss:1090}