(Reading time: 2 - 3 minutes)

மனம் விரும்புதே உன்னை - சஹானி

நீரும் நெருப்புமாய் நான்நின்ற சமயம்
கண்ட    காதல் நதியில் தொடங்கினேன் என் காதல் பயணத்தை பூ மகளை தேடி....

கனியாதோ காதல் என்று நான் உன்னிடம் மயங்கி சொல்ல தயங்கி உன்னையே பார்த்திருந்தேன் நீயே 
சொல்வாயோ என்று....
 
நெஞ்சமெல்லாம் காதலுடன் காதல் நதியென வருவாய் என நான் எண்ணிய கணம்...

காற்றாகவும் நான் வருவேன் என்றுணர்த்தி என் உயிரே உனக்காக என்றொரு வார்த்தையில் என் உள்ளத்தையே வருடிச் சென்றாயடி தென்றலாய்...

சிறகுகள் முளைத்து வானில்   பறக்கிறேனே நான்

அன்று பனிப்பாறையாய் உருகியிருந்த என் மனம் 
இன்று பூஞ்சோலையானதடி உன்  வசம் ...

இனி நிழலாய் உன்னை  தொடர்வேனே ஷைரந்தரி என்னுயிர் தோழியாய் ...
காதலியாய்...

வீசும் காற்றுக்குப் பூவை  தெரியாதா?
அது போல் உன் மனம் நான் அறியாததா...

நீ எனக்காகவே பிறந்தவள் என்று நினைத்தாலே இனிக்கிறதே....

இனி எனக்கு வேறென வேணும் நீ போதுமே....
 
Hi frnds எனக்கு இப்படி ஒரு  கவிதை  எழுத வேண்டும் னு  தோன்றிய மறு கணமே எழுதி முடித்தும் விட்டேன் இறுதியில் என்ன தலைப்பு வைக்கலாம்?  என்று யோசித்தேன். அப்போ எனக்கு தோன்றிய தலைப்பு தான் ''மனம் விரும்புதே உன்னை''
காரணம்  நான் முதல் முதலில் Chillzee யில் படித்த கதை "மனம் விரும்புதே உன்னை" படிக்க படிக்க என்னுள் தோன்றியதும் இதுவே "மனம் விரும்புதே Chillzee. யை" ஆதலால் தான்  இத்தலைப்பு. தோழிகளே, இக்கவியில் கருத்தள்ளதா என்று நான் அறியேன்  எந்த பிழையாயினும் என்னிடம் கூறுங்கள் மறு பதிவில் திருத்த முயற்சிக்கிறேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.