(Reading time: 2 - 3 minutes)

கவிதை -  அக்கறை  தேவையில்லை - தாரணி

Woman-In-Tears

பல கனவுகளுடன் 

பல வண்ணங்களுடன்

 மாலை வாங்கினேன் நான் -

மணவாளனின் கையில் 

மணக்கோலத்தில் மகிழ்ச்சியில் ;

 

நாட்கள் கடந்தன 

சந்தோச சாரலாய் 

மழை கண்ட 

மயில் போல் 

வாழ்க்கையை வாழ்ந்தேன் -

 

 மாதங்கள் கடந்தன 

மங்கை என்னை 

கேள்வி கணைகள் 

மழையென தாக்கி 

மனதை  துளைத்தன -

 

மனதில் ரணங்கள் 

புதிதாய் மீண்டும் 

புது புது பெயரில் 

உருவாகி தொடர்கிறது...

 

நானும் பெண்ணே 

ஆசைகள் பல 

நானும் கொண்டேன் .

 

 

உயிர் என்னுள் வளர 

சூரியனுக்கு ஏங்கும் 

செந்தாமரை போல் 

நானும் காத்து கிடந்தேன் 

 

உணர்வுகள் உள்ள 

கனவுகள் உள்ள

உயிர் உள்ள 

நானும் ஓர் பெண்-

 

 உங்கள் கேள்விகள் 

 உயிர்வரை சென்று 

வலிகள்  விதைத்து 

நிராசை விருச்சம் 

கண்ணீரில் வளர்கிறது .

 

பிஞ்சு ஸ்பரிசத்தை உணர 

என்னோடு சேர்த்தனைக்க 

மடி மீதும்  தோள் மீதும் 

விளையாடி கலைத்திட 

கனா கண்டேன் நான் .

 

தொட்டில் விலக்கி 

தூங்கும் கவிதையை 

ரசித்து சிரிக்க 

கனா கண்டேன் நான் .

 

எனக்கும் --

 உணர்வுகள் உண்டு 

 கனவுகள் உண்டு 

 ஆசைகள் உண்டு 

 வருத்தங்கள் உண்டு ;

 

உங்கள் கேள்வியில் 

உயிர்வரை வலித்து 

அனுதினமும் கூறுபோடும் 

உங்கள் அக்கறை 

தேவையில்லை -

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.