(Reading time: 1 - 2 minutes)

காதல் சுழற்சி - விஷ்ணு பிரதீப்

கடவுளின் காதல்,முதன்மை கொண்ட

        மனிதனின் மேல்...அம்மனிதனின் காதல்  

    இன்பமான இயற்கையின் மேல் ..

 

    இயற்கையின் காதல் அகண்டு கிடக்கும்

        காடுகளின் மேல் ....அக்காடுகளின் காதல்

    வளர்ந்து செழித்த மரங்களின் மேல் ..

 

    மரங்களின் காதல்,மொட்டுவிட்டு விரியும்

        இலைகளின் மேல் ...அவ்விலைகளின் காதல்

    வாசம் வீசும் மலர்களின் மேல் ...

 

    மலர்களின் காதல்  தித்திப்பு  மிக்க

        காய் கனிகளின் மேல் ....அக்கனிகளின் காதல்

    சுற்றித்திரியும் சிறு சிறு பிராணிகளின் மேல் ..

 

    இவைகளின் காதல் தன்னை படைத்த

         பரம் பொருளின் மேல்....இது காலத்தின் 

    சுழற்சியல்ல  காதலின் சுழற்சி....

 

    காலங்கள் மாறினாலும் என்றும் காதல்

         மாறப்போவதில்லை ..அது இமயமனாலும்

    சரி இறைவனாலும் சரி .....   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.