(Reading time: 2 - 4 minutes)

மதுவின் சூது - விஷ்ணு பிரதீப்

தினம் தினம் ..ஒரு மிகப் பெரிய மனிதச் 
சங்கலி போராட்டம் நடக்கிறது மதுக் 
கடை என்னும் மரண வாயிலில் ..!! 

'குடி'மகான்கள் ஒன்று குடி பித்தம் பிடித்து 
பிராத்திக் கிறார்கள் காலனே எங்களை 
ஏற்றுகொள் என்று ..!! 

உடல் சுகத்திற்காக மாதுவினைத் தேடிச் 
செல்பவன் வெட்கப் பட வேண்டும் என்ற 
சமூகம்... 

இரத்த நாளங்களில் சேர்ந்து குருதியோடு 
கலந்து ஓடும் இந்த விஷத் துளிகளுக்கு உடல் 
வலியின் அலுப்பு மருந்து ..காதல் தோல்விக்கு 
கஷாயம் என்றெல்லாம் அங்கீகாரம் தருகிறது...! 

குடித்து குடித்து தன் குடும்பத்தைச் சீரழித்து.... 
கல்லீரலைக் கரைத்து ..கடைசியில் செத்து 
மடிபவனைப் பற்றி எனக்கு கவலை இல்லை ..ஆனால்.. 

அவனது இரண்டு வயசுக் குழந்தை ..தாயின் 
வற்றிய மாரினைப் பற்றி சப்பிக்கொண்டிருகிறது . 
அவள் தாயின் கண்ணில் கண்ணீர் ..மார்பில் பாலுக்கு 
பதில் இரத்தக் கசிவு ... 

இயற்கையே மாற்றிவிட்டது இந்த மது 
மயக்கம்...எனினும் மயங்கியது 
நாம் தானே ..!! 

மனித உணர்வுகளின் விஞ்ஞானி ..சுவாமி 
விவேகானந்தரை வாசிப்பவன்..வெட்டிபையன், 
மந்திரவாதி,வேலையற்றவன்...!!! 

தன் பிறந்தநாளுக்கு தாய்தந்தையின் 
பணத்தில் மதுவினை வாரி வாரி இறைப்பவன் 
கெட்டிக்காரன்,புத்திசாலி,மேதாவி ..!!! 

நல்ல சமூகமடா இது...வாழிய நம் 
மது சமூகம் ...!!!! 

மெச்சிக்கொள்ளும் விஷயம் என்னவென்றால் 
இப்பொது பெண்களுக்கு தனியாக மதுக் 
கடைகள் வந்து விட்டதாம் ..!!! 

அப்பாடா நம் சமூகத்தில் ஆண்-பெண் 
சமத்துவம் சாத்திய மாகிவிட்டது ..!! 

மது என்பது போதை மட்டுமல்ல கண்ணாடிப் 
பேழையினுள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 
நம் கலாசாரத்தின் சீரழிவு ..!! 

கள்ளினை மருந்தாக குடித்து வந்த காலம் 
போய்..இன்று கள்வெறிப் பிடித்து போய் 
அலைகிறது நம் சமூகம் ..!! 

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு ..என்று 
சொல்லும் அரசாங்கம்.மது விற்பனை மலிந்து 
விட்டால் ..ஊழியர்களை வேலை நிறுத்தம் 
செய்கிறது ..!! 

இந்த நிலைமை மாறும் வரை ..மதுவால் 
நம்மவர்களின் மடமை ஓங்குவது ஓயாது .. 
களிகாலம் மது உரத்தால் நன்கு செழித்து 
கொழித்து வளரும் ... 
வாழிய நம் மது சமூகம் ..!!!! 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.