Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 2 - 4 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It

கடலில் காதலன் ....!! - விஷ்ணு பிரதீப்

  கடலில் காதலனைத் தொலைத்து விட்ட ஓர்

  காதலியின் குரல் ..

 

  ஓ..கடலன்னையே காதலைத் தொலைத்து

  விட்ட காதலியின் கதறல்

  கேட்கிறதா ...உனக்கு ?

 

  அலைகளின் ஓசையில் இந்த,

  அபலைப் பெண்ணின் ஓலத்தையும்

  சேர்த்துக் கொள் ..!

 

  காதலின் நதியில் என்னை ,

  ஓடமாய் சுமந்து தங்கிச் சென்ற ...என்

  தலைவன் ...இன்று

 

  உன்னில் மிதந்து கொண்டிருக்க

  நானோ அவன் விட்டுச் சென்ற

  நினைவுகளில் நனைந்து கொண்டிருக்கிறேன் ..!

 

  என்னவனை என்னிடம் தந்து

  விடு தாயே...

 

  சிப்பிக்குள் இருந்து முத்தெடுக்க அவன்

  செல்லவில்லை,இந்த முத்திற்காக

  சிப்பி எடுக்க சென்றிருக்கிறான் ..!!

 

  கரையோரம் ஈர மணலில் தவழ்ந்து

  கொண்டிருக்கும் நண்டினை போல

  என் மனம் அலைகிறது ....

 

  இந்த திசையில் வருகிறானா ..இல்லை

  அந்த திசையில் வருகிறானா .

  என்று  பார்பதற்காக....

 

  உன்னிடம் மட்டுமல்ல கடற்கரையின்

  கடைக்கோடியில் இருக்கும் கோரைப் பறைகளிடமும்

  இப்படி சொல்லி வைத்தேன் ..

 

  கருங்கற் பாறைகளா கேளுங்கள் ..நீங்கள்

  இந்த நீண்ட நெடுங் கடற்கரையின் காவலர்கள்

  ஆதலினால் உங்களிடம் கூறுகிறேன் ..

 

  என் காதலன் கடலுக்குச் சென்றிருக்கிறான் ,

  வந்ததும் எங்களுக்கு கல்யாணம் ,

  அதனால் நீங்கள் .....

 

  'அதனால் என்ன'என்ற பாறைகளிடம்,இன்று

  பௌர்னமி இரவு..சந்திரன் சேர்த்து வைத்த

  குளிரை எல்லாம் உமிழ்வான் வாடைக் காற்றாக ..!

 

  வாடையின் வாதத்திற்கு அஞ்சி,கடலுக்குள்

  அமர்ந்து ஒடுங்கி விடாதீர்கள் ..என் காதலன்

  இன்று வருவதாய் மனதில் ஓர் சேதி ..!!

 

  உங்களது மேனி தான்,என் பஞ்சு மெத்தை

  நான் தூங்கிவிட்டால் என்னை துயிலெழுப்

  புங்கள் அவன் வரும் போது....

 

  அவன் வாசம் பட்டால் என் தூக்கம்

  கலையும் என்று நம்பினேன் ..கலைந்தது

  நாட்களும் நம்பிக்கையும் தான் ..!!

 

  அங்கே கோரைப் பாறைகளுடன் ஓர்

  அழுக்குப் பெண்ணும் படிந்து

  விட்டாள்..பாறையின்  படிமமாக ..!!

 

  உச்சி வெயிலில் என் உயிரவன்

  காய்ந்து கொண்டிருப்பானே ..!!

 

  வானிலிருக்கும் கருமேகங்களை தூது

  அனுப்பி அவனுக்கு கருமை காட்டச்சொன்னேன்

  அவர்களோ ..என்னை கண்டு கொள்ளவில்லை  ..!!

 

  கடலில் ஒருவனும் ...இங்கே கரையில்

  ஒருத்தியும் காய்ந்து கிடப்பது

   தான் காதலா ???

 

  இந்த காதலுக்கு நீ தான் சாட்சி

  சொல்ல வேண்டும் கடலன்னையே ..

 

  என்னைவனை என்னிடம் தந்து

  விடு தாயே ..!

 

  இல்லையெனில்,இதோ ஓர் சமரசம்

  உன் சத்தத்தை எல்லாம் ஒடுக்கிக்

  கொண்டு கவனமாகக் கேள் ..!!

 

  என்னவனை ..நீ உன்னிடம் வைத்து

  கொள்ளப் போகிறாய் என்றால்..இதோ உன்

  மகளையும் நீயே எடுத்துக் கொள் .!!

 

  எங்கள் கல்யாணம் அக்னிக்குப் பதில்

  அலைக்கடலே உன் தலைமையில்

  நடந்து விட்டுப் போகட்டும் ..!!!!

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
Add comment

Comments  
+1 # RE: கடலில் காதலன் ....!! - கவிதைPriya 2014-12-24 09:44
வாழ்த்துக்கள் விஷ்ணு...

எப்போதும் போல இதுவும் ஒரு சிறப்பு.. சமூகத்தின் அவலங்களில் கண்ட அனல் பறக்கும் வார்த்தைகளும் அழகு.. காதலின் கவலையினை உணர்த்தும் அலைப்புறும் வார்த்தைகளும்...
எப்படி பார்த்தாலும் உங்கள் கவிதை அழகாகவே தெரிகிறது..!!
வைரமுத்து,பாரதி,தபு ஷங்கர் வரிசையில் விஷ்ணு பிரதீப் சேர்ந்து விட்டதன் மாயம் உங்கள் பேனா ஒன்றே அறியும் என நினைக்கிறன்..!!!
நிறைய கவிதைகளோடு தொடர்ந்து விரைந்து வாருங்கள்...!!
Reply | Reply with quote | Quote
+1 # RE: கடலில் காதலன் ....!! - கவிதைPRADEEPVISHNU 2014-12-24 22:43
தங்களின் வாழ்த்துக்கு என் பணிவான நன்றிகள் தோழி..!!!
நான் எழுத ஆரம்பித்த எந்த குறுகிய காலத்தில்,எனக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்திருப்பது
மனதினை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது தோழி..என் மனதினுள் துளிர் விட்ட உணர்ச்சிகளுக்கு கவிதை
வண்ணம் பூசவே காத்திருக்கிறேன் ..!!
நன்றிகளுடன்,
விஷ்ணு
:thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கடலில் காதலன் ....!! - கவிதைMeena andrews 2014-12-23 22:05
superb vishnu :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கடலில் காதலன் ....!! - கவிதைchitra 2014-12-23 21:23
super Vishnu (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கடலில் காதலன் ....!! - கவிதைameer 2014-12-23 21:00
சங்க இலக்கியத்தில் தலைவனின் ஏக்கத்தில் தலைவி தன் தோழியிடம் குமுறுவாள்.அந்த வகையில் இருக்கிறது இந்த கவிதை.பாராட்டுக்கள்.
Reply | Reply with quote | Quote
# RE: கடலில் காதலன் ....!! - கவிதைPRADEEPVISHNU 2014-12-24 22:45
nandri tholare....!!! :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கடலில் காதலன் ....!! - கவிதைBindu Vinod 2014-12-23 19:53
superb Vishnu (y) semaya ezhuthureenga neenga. romba nalla irukku :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கடலில் காதலன் ....!! - கவிதைKeerthana Selvadurai 2014-12-23 12:34
Fantastic :clap: (y)
Reply | Reply with quote | Quote
# RE: கடலில் காதலன் ....!! - கவிதைMadhu_honey 2014-12-23 11:02
superb (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கடலில் காதலன் ....!! - கவிதைJansi 2014-12-23 05:37
மிக உருக்கமான கவிதை விஷ்ணு :yes: (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கடலில் காதலன் ....!! - கவிதைThenmozhi 2014-12-23 03:00
very nice Vishnu.

padikum pothu manam varunthugirathu.

romba alaga eluthi irukinga :clap:
Reply | Reply with quote | Quote
# RE: கடலில் காதலன் ....!! - கவிதைSailaja U M 2014-12-23 09:50
Nice kavidhai Vishnu :yes: :clap: (y)
Reply | Reply with quote | Quote
# RE: கடலில் காதலன் ....!! - கவிதைPRADEEPVISHNU 2014-12-24 22:45
mikka nandri thozhi...!! :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Thaanu's Avatar
Thaanu replied the topic: #1 22 Jan 2019 11:03
Superb
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 14 Jan 2019 07:14
#கவிதை - பகல் கனவு - Azeekjj

@ www.chillzee.in/poems-link/377-azeekjj-k...pagal-kanavu-azeekjj
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 14 Jan 2019 07:11
#கவிதை - இனித்தது - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...hai-inithathu-viji-p
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 13 Jan 2019 05:28
#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...endra-kadavul-viji-p
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 12 Jan 2019 20:21
#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P

@ www.chillzee.in/poems-link/373-viji-p-ka...-vilaiyaattum-viji-p

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top