கவிதைத் தொடர் - வரி வரி கவிதை - 06 - ஷக்தி

" உடல் தளர்ந்து, இமைகள் இணையும் வழிப்பாதையில்,
ஆன்மாவின் அந்நிய கிரக பயணம் - அது ஓர் கனவுப்பயணம் !
Its a journey of dream - The travel of the soul into an alien planet through the junction of the eyelids! "
PS :
இந்த வரிகள் - வேற எதையும் பேசல.. தூக்கத்தையும், தூங்குறதுக்கு கண்ணை மூடும் போது கனவுகள் என்ற ஒரு உலகத்துக்குள்ள போற அந்த தருணத்தையும் தான்..
கனவுப்பயணம் :
ஆமா.. அது ஒரு பயணம் தான். அது ஒரு குறுகிய கால பயணமா இருக்கலாம், நீண்ட கால பயணமா இருக்கலாம்.. இப்ப நாம் வாழ்கிற இந்த உலகத்துல பயணிக்கிற ஒரு மெய்யான பயணம் இல்லை .. இது ஒரு அந்நிய பயணம்.. வேற்று கிரக பயணம்.. இதுல காலம் என்பது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இல்லை.. காலம் கூட இங்க காத்திருக்கவும் செய்யும் ஓடி ஒழியவும் செய்யும்.. அப்படி ஒரு அந்நியம்..
இந்த பயணத்துல நாம சந்திக்கிற உலகங்கள் எல்லாமே, நம்ம நிகழ் உலகத்துல நம்ம சிந்தனைகளையும் சந்தர்ப்பங்களையும் பிரதிபலிக்கின்ற பயணங்களாக மட்டுமில்லாம நிறைவேறா ஆசைகளையும், நிஜ உலக காலத்தால் அழிக்கப்பட்ட நம்ம வாழ்க்கைப் பகுதிகளையும் வேறு பரிணாமத்தில் பிம்பப்படுத்தக் கூடியதாகவும் இருக்க கூடும்.
இந்த பயணங்களில் ஏதும் நமக்கு பிடிக்கலைன்னா கூட பயணத்தை நிறுத்தி திருத்தி கொள்ள வாய்ப்புகள் உண்டு.. நான் நிறைய முறை பண்ணிருக்கேன்.. ஹாஹா.. எடுத்துக்காட்டுக்கு ஒரு கரடி வந்து ஊர்ல ஒவ்வொருத்தரா எல்லாரையும் சாப்ட்ரும் முதலில்.. நான் தான் கடைசி. என்னையும் சாப்ட்ரும்.. அப்றம் பயந்து தூக்கத்துல இருந்து எழுந்து பார்த்தா நடு இரவு, அப்ப உடனே சரி திரும்ப அதே கனவுக்கு போய் அந்த கரடி அடித்து துரத்தி விடுவோம்னு அதே நினைப்புல திரும்ப உள்ள போய், அந்த பயணத்தை திருத்திய நிகழ்வுகள் இன்னும் இருக்கு.. ஆனால் எல்லா நேரங்களிலும் இந்த திருத்தி கொள்ளும் வாய்ப்புகள் அமைவதில்லை.. வேடிக்கை தான்.. இந்த பயணங்களும்!
காலங்கள் கடந்து நிஜங்கள் மறந்து நித்திரையில் பயணிக்கும் இந்த அந்நிய கிரக பயணங்கள் சுவாரசியமானவை தான் நிஜத்தில்..
இந்த பயணத்தை பற்றிய உங்க அனுபவங்களையும் பகிருங்கள் நட்புகளே!
கனவுப்பயணம் - ஓர் முடிவில்லா அந்நிய கிரக சாகாசப்பயணம் தான் ! "
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.