(Reading time: 1 minute)

உன்னில் ஆயிரம் - ஷக்தி 

Twilight

உன் சிறு புன்னகை,

ஆயிரம் மொழிகள்…

 

உன் ஓர விழி பார்வை,

ஆயிரம் கவிதைகள்…

 

உன் இரு இதழ் ஸ்பரிசம்,

ஆயிரம் காதல் கதை…

 

உன் கன்ன குழி ஆழம்,

என்னை மூழ்கடிக்கும் 

ஆயிரம் அடி சுனாமி…

 

உன் சிணுங்கல் ஒலி,

ஆயிரம் மழலை சத்தம்…

 

உன் கூந்தல் வாசம்,

ஆயிரம் பூஞ்சோலை…

 

என் இத்தனை பொய்கள்,

உன்னோடு மட்டுமான

ஆயிரம் கள்ள தனம்… 

 

என்றுமே என்னில் நீ தித்திப்பாய்,

என்னை கிறங்கடித்து கொண்டே...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.