(Reading time: 4 - 7 minutes)

 07. ராதா கிருஷ்ணன் காதல் - அருந்ததியின் நண்பன் ஆகிய கண்ணன் - புவனேஸ்வரி

Radha krishna kathal

அடைமழையில் நடுங்கியது கானகம்

அனல் பறக்க கொதித்தது அருந்ததியின் அகம் !

 

ராதையின் தோழியவள் வந்தாள்

கண்ணனின் பாதை நோக்கி சென்றாள் !

 

அனைத்தும் அறிந்தான் மாதவன்

அவள் வழியில் தேடி சென்றான் மாயவன் !

 

பேசும் மான் ஒன்று வழி மறைக்க

நின்றாள்  பெண்ணவள் அதை தடுக்க !

 

மானே வழிவிடு !

மாட்டேன் என்னோடு போர்தொடு !

 

மானிடன் ஆகிய பெண் நான் ,lஎப்படி தொடுப்பேன் உன்னுடன் போர் ?

மானிடன் ஆகிய பெண் நீ, தொடுக்கலாமோ எங்கள் கண்ணனுடன் போர் ?

 

கேட்கவேண்டியதை என்னிடம் கேள் !

கூற வேண்டிய பதில் யாம் உரைப்போம் !

 

கூறியதே வாய்பேசும் அதிசய மான்

தோன்றியதே அருந்ததிக்கு இனி பிடிவாதம் வீண் !

 

எங்கே உன் கண்ணன் ?

பெண்ணிவளை  எதிர்கொள்ள துணிவில்லையோ  ?

 

எங்கே உன் இதயம் நான் காணவேண்டும்

மானின்முன்  மனம் காட்ட துணிவில்லையோ ?

அல்லது நீதான் இதயம் அற்றவளா ?

 

தேவையில்லா குதர்க்கம் !

எதற்கு செய்கிறாய் தர்க்கம் !

 

உடலில் உறைந்திருக்கும் இதயத்தை உன் கண்களில்

காட்டிட நான் கண்ணனை போல மாயவள் இல்லை!

 

அதுவே எனது பதிலும்

எங்கும் உறைந்திருக்கும் யதுனந்தனை

உன் கண்ணில் காட்டுவதும் சாத்தியமில்லை !

 

எங்கும் உறைந்திருப்பவன்

என் சகிக்கு காதல் பிணி தந்தவன் ஆவான் !

 

எங்கும் உறைந்திருப்பவன்

உன் சகிக்கு மெய் அன்பின் சத்தியம் உரைப்பவன் ஆவான் !

 

அப்படி என்ன சத்தியம்

சொல்லிடு என்னிடம் நீயும் !

 

அன்பு கொண்ட நெஞ்சம் மட்டுமே அறிய முடிந்த சத்தியம்

கோபம் வியாபிக்கும் உன் உள்ளத்தில் நிற்காது என் சத்தியம் !

 

துறக்கிறேன் கோபம் , மறக்கிறேன் என் வன்மம்

கூறு நீ நிச்சயம் , அருந்ததிக்கு அன்பின் எதார்த்தம் !

 

அருந்ததி நீ குணத்தால்  பரிசுத்தம்

அதனாலேயே உனக்கு வேண்டாம் கோபமெனும் அபத்தம்

கூறுகிறேன் கேள் அன்பெனும் சகாப்தம் !

 

மண்டியிட்டாள் அருந்ததி மானின் முன்

தொடங்கியது மான், அதன் விளக்கம் !

 

கேளாய் அருந்ததி !

அன்பெனும் அதிசயம் பஞ்ச பூதங்களுக்கு கட்டுப்பட்டது !

 

அன்பு காற்று என்றால் ,

அது உருவமற்று இருக்கும் !

 

அன்பு தீ என்றால்

அது விரக தாபம் மூட்டும் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.