என் இனியவன் அவன் - புவனேஸ்வரி
இவன் எனது நண்பனா ? அல்லது
உள்ளத்தை கொள்ளை அடித்த காதலனா ?

என்னை சிரிக்க வைப்பதும் இவன்தான்
என்னை அழ வைப்பதும் இவன்தான் !
என்னை சிலிர்க்க வைப்பவனும் இவன்தான்
என்னை துயரத்தில் ஆழ்த்துபவனும் இவன்தான் !
என்னை உறங்க வைப்பவனும் இவன்தான்
என் உறக்கத்தை களவாடுபவனும் இவன்தான்!
என் நினைவுகளை மறைக்க வைப்பதும் இவன்தான்
என் நினைவுகளை தூண்டி விடுபவனும் இவன்தான் !
என்னை தனிமையில் நிருத்துபவனும் இவன்தான்
என் தனிமையை துரத்துபவனும் இவன்தான் !
என்னை சிணுங்க வைப்பதும் இவன்தான்
என்னை அள்ளி அணைப்பதும் அவன்தான் !
என்னை ரசிக்க வைப்பதும் இவன்தான்
என்னை விரும்ப வைப்பதும் இவன்தான் !
என்னை கனவில் ஆழ்த்துவதும் இவன்தான்
என்னை இயல்பிற்கு மீட்பவனும் இவன்தான்!
இவனை நினைக்காத நாள் என்பது எனது நாள்காட்டியில் இல்லை
இவனை வெறுத்த நொடி என்பது என் கடிகாரத்தில் இல்லை !
இவனை உணராத நிலை என்பது என் புலன்களுக்கு இல்லை
இவனை விரும்பாத தருணம் என்பது என் இதயத்திற்கு இல்லை !
இவனை யாருடனும் ஒப்பிடுவதே இல்லை
இவன் ஈடுஇணையற்றவன் !
இவனை எதிலும் நிறுத்தி வைப்பதில்லை
இவன் எல்லைகள் இல்லாதவன் !
இவனுக்கு என்றொரு பெயரை சூட்டவில்லை
இவன் அனைத்து அழகிய பெயர்களை விட அழகானவன் !
இவனை காதல் என்று உரைப்பதில்லை
இவன் பிரிவை தராதவன் !
இவனை ஜீவன் என்று சொல்வதில்லை
இவன் மோட்சத்திற்காக புவியை பிரிவதில்லை !
இவனை என்னவன் என்று கட்டுபடுத்தவில்லை
இவன் அனைவருக்கும் அன்பன் !
இவன் சொல்லாத சோகம் இல்லை
இவன் உரைக்காத தத்துவம் இல்லை !
இவன் தராத புத்துணர்ச்சி இல்லை
இவன் தராத மோனம் இல்லை !
இவன் இல்லாத நாடே இல்லை
இவனுடன் இணையாத மொழியே இல்லை !
இவனை வெறுக்கும் உயிரே இல்லை
இவனை நேசிக்காத மனிதனும் இல்லை !
எங்கும் நிறைந்தவன் என்றென்றும் என்னை இயக்குகிறான்
" இசை " எனும் என் இனியவன் அவன் ..!
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.