(Reading time: 1 - 2 minutes)

கானல் நீராய் ... சில நேரம் கண்ணீராய் ..! - புவனேஸ்வரி 

Kaanal neer

காதல் ..!

நேராய் நடக்கும் எந்த மனிதனையும்

தலைக்கீழாய் திருப்பி போட்டு விடும் மாயை ..!

 

காணும் இடமெங்கும் நிறைந்திருக்கும் காற்றுப்போல் 

எல்லோருக்கும் ஒரு காதல் ..!

 

அவரவர் உலகில் அவரவர் மாயை !

எனினும் காதல் என்பதுஎன்ன ?

 

ஒரே ரசனைகளில் பின்னி பிணைவதா ?

எதிரெதிர் ரசனைகளை ரசித்து நெகிழ்வதா ?

 

அப்சரஸ் அழகில் மயங்கி விழுவதா ?

ஆணழகின் சிறப்பில் தன்னை தொலைப்பதா ?

 

பேசிக்கொண்டே இருப்பதா ?

பேசாமல் கவி வடிப்பதா ?

 

கை கோர்த்து சேர்ந்து நடப்பதா ?

கை விடாமல் இருப்பதா ?

 

பொறாமையில் அழகு சேர்பதா ?

பொறுமையில் காத்திருப்பதா ?

 

வாதங்களில் வளர்வதா ?

பிடிவாதங்களில் விட்டு கொடுப்பதா ?

 

உனக்கென நான் எனக்கென நீ என்பதா ?

நீயும் நானும் வேறல்ல என்பதா ?

 

இனிமையான உணர்வுக்குள் எத்தனை கேள்விகள் ?

பதில் தேடாமல் மனம் தேடும் தேடலா காதல் ?

 

மனதின் தேடலின் காதல் என்றால்

அங்கு தேகத்தின் சிலிர்ப்புக்கு என்ன வேலை ?

 

தேகத்தின் தீண்டல் தான் காதல் என்றால்

எம் முன்னோர் கண்களில் நான் காண்பதும் என்ன ?

 

தினம் தினம் உலகை மூழ்கடிக்கும் காதல்

என் கண்களுக்கு மட்டும்

கானல் நீராய் ... சில நேரம் கண்ணீராய் ..!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.