(Reading time: 2 - 3 minutes)

என் குடும்பம் - புவனேஸ்வரி 

World

என்னை பெற்றவளால்

ஒரு முறைக்கு மேல் பிரசவ வலியை தாங்க முடியாது

என்றெண்ணி இறைவன் படைத்தான்

என் சகோதர சகோதரிகளை மற்ற தாய்களின் வயிற்றில்!

 

அன்னை வயதில் இருப்பவர்களை எல்லாம்

“அம்மா” என்றேன்

தந்தை  வயதில் இருந்தவர்களை எல்லாம்

“அப்பா” என்றேன்

 

வயதில் மூத்தவளை

“அக்கா” என்றேன்

வயதில் பெரியவனை

“அண்ணா” என்றேன்

 

சக வயதில் இருந்தவரெல்லாம்

என் நட்பிற்கினியவர்கள்

இளையோரெல்லாம் என்

“தம்பி தங்கைகள்”

 

எத்திசையிலும் எங்கள் குடும்பத்தார் என்றேன்

உலகெல்லாம் என் வீடூ என்றேன்

இயற்கை அழகெல்லாம் நான் வாங்கி வந்த வரமென்றேன்

தொழில் அனைத்தும் வாழ்வியல் தந்த சுகமென்றேன்

 

சொர்க்கம் என்பது பூமியில் தான் என்றேன்

இனிய நாள் என்பது இன்று தான் என்றேன்

 

என் வீட்டு வாசலில் ஏதோ விழுந்தது

ஓ நாளிதழ்..!

இல்லை என் இன்பத்தை பறிக்க வந்த

கருப்பு மையிட்ட குருதிப் பத்திரிக்கை

 

என் சகோதரன் விபத்தில் மடிந்தானாம்

என் சகோதரி விலைமாது என்ற பெயரில் கை செய்யப்பட்டாளாம்

என் அன்னை வழிப்பறியில் கொல்லப்பட்டாராம்

என் தந்தை குடி குடியை கெடுக்காது என போராட்டம் புரிகிறாராம்

 

இன்னொரு பக்கத்தில்

என் உறவுகளை எல்லாம்

தீவிரவாதம் கொன்று குவிக்கிறதாம்

 

என் தங்கையர்களின் கற்பு பல துரியோதனைகளுக்கு இறையானதாம்..

இறைவனை வேண்டுவோமாக ! என்ற வாசகமும் படித்தேன்

எங்கே இறைவன்?

என் குடும்பத்தை பினியில் இருந்து காக்க தவறியவனிடம்

என்ன கேட்க வேண்டும்?

தவறு நடக்கும் போது மௌனமாய் இருந்தவனிடம்

என்ன கேட்பேன்?

பூஜை செய்ய வேண்டுமாம், யாருக்கு?

லஞ்சம் வாங்கும் பழக்கத்தை வேண்டுதல்கள் தான்

தொடங்கி வைத்தனவோ?

இனி எதற்கு நான் லஞ்சம் தரவேண்டும்?

 

போன உயிரை திரும்ப கொடு என்றா?

மீண்டும் கற்பு வேண்டும் என்றா?

கேட்டால் கிடைத்திடுமா?

கிடைக்கும் என்றால் சொல்லுங்கள்

காலம் முழுக்க கடவுளின் காலடியில் கிடக்கிறேன்

என் உலகெனும் குடும்பதிற்காக !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.