(Reading time: 1 - 2 minutes)

01. மகளின் டைரி - வானை நோக்கி ஒரு பயணம் – அப்பாவுக்காக - புவனேஸ்வரி

Daughter

உயிரில்லா சிறுகொடி போல

இலக்கில்லாத பிள்ளை நான்!

 

கொடியை வான் நோக்கி பறக்க வைக்கும்

தூண்போலவே என் தந்தை !

 

வானைப் பார்க்கும் ஆசை வந்தது,

தூணின் உதவியில் மேலே சென்றேன்!

 

விதி சிரித்தது, தூணும் இடிந்தது

கண் இமைக்கும் நொடியில் இரு வழியாய் பிரிந்தது வாழ்க்கை !

 

ஒன்று, வானை நோக்கி நான் பறந்திட வேண்டும்,

அல்லது, துவண்டு மண்ணில் வீழ்ந்திட வேண்டும் !

 

பல துயர் தாண்டி துணை நின்ற தூணுக்கு,

என் வீழ்ச்சியை பரிசளிப்பதா?

 

இல்லை..! இல்லவே இல்லை !

இதோ துணிந்துவிட்டேன் காற்றின் உதவியில்

மீண்டும் வானை நோக்கி பறக்க!

 

என்னை சுமந்த தூணுக்கு

என்றென்றும் வானோக்கி பறந்து

நன்றி நல்குவேன் !

 

Magalin diary 02 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.