(Reading time: 3 - 5 minutes)

கல்யாணமாம் கல்யாணம்... அறுபதாம் கல்யாணம்.... - தங்கமணி சுவாமினாதன்

சமீபத்தில் அறுபதாம் கல்யாணம் ஒன்றிர்க்குச் சென்றிருந்தேன்.கல்யாணப் பெண் எனது தோழி.அவர் உடனடியாக தன்னையும் தனது கணவரையும் வைத்து கவிதை ஒன்று எழுதித் தரும்படி கேட்க நானும் எழுதிக் கொடுத்தேன்.நான் சற்றும் எதிர்பாராமல் அங்கு இக் கவிதை மைக்கில படிக்கப் பட்ட போது எனக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது.ஆனால் கேட்ட அனைவரும் சிரித்த சிரிப்பொலியாலும், கரகோஷத்தாலும்,என் அருகில் வந்து பாராட்டியதும்..ஹி..ஹி..ஒரே தமாஷ்....அக்கவிதை அன்பு சில்சீ வாசகர்களுக்கும் இதோ..

 

தம்பதிகள்: திரு.சுப்ரமணியன்-திருமதி கிருஷ்ணவேணி. திரு.சுப்ரமணியன் அவர்களே கவிதை பாடுவதுபோல்..

 

coupleஎந்தன் உயிரின் உயிரே...கிருஷ்ணவேணி....

எட்டி எட்டிப் போகாதக் கிட்ட.. கொஞ்சம் வாயேன்..நீ..

எந்தன் வயது அறுபத்தொண்ணாம்..

உனக்கு வயதோ அம்பத்தொண்ணாம்...

அடியே... யார் போட்ட கணக்கு இது..?

தப்புக் கணக்கு...

ஆர்யா போல ..நானிருக்கேன்..

.... தாரா போல நீ இருக்க..

மணமாகி நமக்கு பல... காலம்மாச்சுன்னு..

அறியாமல் பலரும்.... புரியாமல் பேசலாம்..

இன்றுதான் நமக்குத்...  திருமணம் ஆச்சுது.. 

இதுவே "மு' இரவு... பத்துமணி ஆச்சுது..

எட்ட எட்டப் போகாம..

கிட்டக் கிட்ட வாயேண்டி..

கட்டிப் புடிச்சு நாமதான்..

கதகளி ஆடுவோம்..

இதாரு கையிலே கரும்பு வில்லு ஏந்தியே..

கணை தொடுக்க ஒருதன் இங்கே..

காத்துக்கிட்டு நிக்கிறான்..

புரிஞ்சிபோச்சி அவந்தாண்டி..

காதல் மன்னன் காமனே...

அவனோடு நாமதான் சண்டை போட வேணாண்டி..

மண்டியிட்டு அவனதான்... பணிந்திட்டால் நமக்குத்தான்..

காட்டாற்று வெள்ளம்போல் காதல் மழை பொழியுமே..

உன் கன்னத்தக் கொடேண்டி கிள்ளித்தான் பாக்கிறேன்..

கண்ணாடிக் கன்னம் பார்த்துத் தலை சீவிக் கொள்கிறேன்..

சின்னச் சின்னக் கோவத்தோடு சிணுங்கி நீ ..நிக்கும்போது..

சித்தம் கலங்கிப்போகுது உன்னைச்... சிறை பிடிக்கத் தோணுது..

ஒன்னப் போல ஓரழகி... இந்த ஒலகத்துல இல்லடி..

ஓய்யாரி நீ ரொம்ப... அழகாத்தான் இருக்கடி..

மெய்யாதான் சொல்லுறேண்டி இது "கதையல்ல நிஜமடி"...

"பையில்ல பையில்ல" நிதமும் ..நீ சொல்லுற..

பை வேண்டாம் உன் "மெய்" போதும் என்" கை " வாடி" பைங்கிளி..

தயக்கம் என்ன? சொல்லடி.."கிறக்கம்" தலைக்கு ஏறுது..

வாடி வாடி"கிச்சுகுட்டி'... ஒன்னக்... கிச்சுக் கிச்சு மூட்டுறேன்...

நாம சிரிச்சு சிரிச்சு... பேச்சக் கொறச்சு..செயல் பாட்டில் இறங்கலாம்..

பல வருஷம் நாமிதுபோல் பயன்பாட்டில் இருக்கலாம்..

என் காதல் கிளியே வாயேண்டி...கட்டிக் கரும்பே வாயேண்டி..

சின்னப் பூவே வாயேண்டி..சிட்டுக் குருவியே வாயேண்டி..

பட்டுக் குட்டியே வாயேண்டி... பவழ மல்லியே வாயேண்டி..

 நீ...சட்டுன்னுதான் வல்லேன்னா...

நான்... தூங்கிடுவேன் போயேண்டி...கொர்...கொர்..கொர்...

நான் தூங்கிட்....டேன்.....

-ஏமாற்றமுடன் உன் காதல் கணவன்....ச்சுப்ரமணி... 

தணிக்கையின்றி கவிதை கொஞ்சம் ஓவராக இருக்கிறதோ? சாரி..

"பை"யில்ல--அர்த்தம் புரிந்து கொள்க,கிச்சுகுட்டி..'கிச்சு"--கிருஷ்ணவேணி

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.