(Reading time: 2 - 4 minutes)

தேவை தடைகளற்ற வானம்..தளைகளற்ற சிறகுகள்... - தங்கமணி சுவாமினாதன்

Bridge to sky

தளைகளற்ற சிறகுகள் கொண்டு..

தடைகளற்ற வானத்தில்..

தினம் தினம் பறந்து செல்ல..

தணியாத ஆசையுண்டு..

அண்டங்கள் அனைத்தையும்..

அண்டரண்டப் பறவையாய்..

தனியாகப் பறந்து சென்று..

தரிசிக்கும் ஆவலுண்டு..

ஈரேழு உலகமும் இறைவனின்-ஆட்சியில்

எவ்வாறு உள்ளதென்று..

விரல்கட்டை அளவு கூட..

விடாமல் சுற்றி வந்து..

விபரமறிய நெஞ்சில்..

விருப்பம் அதிகமுண்டு...

வானத்தில் கோள்களெல்லாம்..

சூரியனைச் சுற்றிவர.. 

மனித..ஜாதகத்தில் விளையாடும்..

வலிமை மிகு கிரகங்களை..

கேள்விகள் பல கேட்டு..

திணறடிக்க மனத்தினுள்..

ஆவேசம் அதிகமுண்டு..

நிலவில் முகம் பார்த்து-அதன்

ஒளியில் உடல் பார்த்து..

தலைசீவி.. சிறகுகள் நீவி..

வடை சுடும் பாட்டிதரும்..

வடை தின்று.. வம்பு பேசி..

குஷியாய்க் கொஞ்ச நேரம்..

உறவாடும் எண்ணமுண்டு..

வானத்து விண்மீன்கள்..

வைரமாய் மின்னுகையில்..

அலகால் கொத்தி எடுத்து.. 

அவற்றைச் சேமிக்கும்..பேராசை

நெஞ்சுக்குள் அதிகமுண்டு

ஆயுள் முழுதுமந்த..

ஆகாய வெளிதனிலே..

நோகாமல் வாழ்ந்திடவே..

சாகாத ஆசையுண்டு...

இனி... வேண்டாம் மனித பூமி..

இங்கு... வாழ்ந்தது போதும் சாமி..

சொந்தங்கள் காட்டும் பாசம்...

நிஜமில்லை எல்லாம் வேஷம்...

உண்மைபோல் பொய்மை..

நேர்மை போல் கயமை..

அன்பைப் போல் துரோகம்..

சூதும்,வாதும்,பொய்மையும்,களவும்,

கொலையும்,ஏமாற்றும்...

மாசாய்க் காற்றும்,விஷமாய் நீரும்,.

உயிர்ச் சத்தில்லா உணவும்..

உண்மை உறையா மனித மனங்களும்..

அடுத்துக் கெடுப்பதும்..

கெடுத்து அழிப்பதும்..

அரசியல் அலங்கோலமும்..

சினிமாவால் சீரழிவும்..

விஞ்ஞான தாக்கத்தால்..விளைகின்ற..

பலனை விட..பட்டீஸும்,குட்டீஸும்,

விடலைப் பிள்ளைகளும்..வீணாய்ப் போகின்ற..

வித விதமான காரணங்கள்..

படிக்கும் வயதில் குடிக்கும்.. 

மாணவ சமுதாயம்...

கொஞ்சம் கொஞ்சமாய்..

நஞ்சாய் மாறும் புனித பூமி..

இனி என்று விடுபடும்?இந்த பாழும் பூமி?..

சொல்லுமோ ..நம்மைப் படைச்ச சாமி?

அதுவரை வேணாம் இந்த மனித பூமி...

எனவே..மேலே..மேலே பறந்து..திரிய..

அண்டங்கள் தோறும் அலைந்து..மகிழ...

தேவை..

தடைகளற்ற வானம்..

தளைகளற்ற சிறகுகள்....

 

எனவே..தேவை..

தடைகளற்ற வானம்..

தளைகளற்ற சிறகுகள்...

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.