(Reading time: 1 minute)

எனக்குள் ஓர் குழந்தை - அமீர்

rain

விலையேற்றம் எதிர்த்து 
ஒரு போராட்டம்...
சிலை அகற்ற மறுத்து 
ஒரு போராட்டம்...

வியாபம்
தாத்ரி
குவாரி
நீதி கேட்டு போராட்டம்...

மாடு
செம்மரக்காடு
மது 
மானபங்கத்தில் மாது
தடுத்திட போராட்டம்...

கோடானு  கோடியில் 
அரசின் திட்டங்கள்
குடிமகனின்
வாழ்க்கையோ
தெருக்கோடியில்...

வீட்டில்
வராதுவந்த விருந்தினர்
வந்து திரும்பினர்...

நாட்டில்
பெறாது  பெற்ற  விருதுகள்
வெந்து திருப்பினர்...

இவை..
அத்தனையையும் ஒதுக்கி
பெய்யும் மழையைக் கண்டதும்
ரசிக்கிறது
எனக்குள் இருக்கும் குழந்தை!

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.