(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நான்தான் தெய்வம் - நிலவினி

God

வாஸ்து பாத்து 

வக்கணையாய் வாய்த்த இடம்தான்......

தகிக்கின்ற கோடையிலே....

தணிவான அரசமர நிழல்தான்.....

நிர்மானித்தவன் நிந்தனை கோளாறோ.......

நிரந்தர தீர்வாய் நேர்ந்ததோ......

நின்றாகிவிட்டது......

அவரவர்க்கு ஆயிரம் குறை....

அதியிலிருந்து அந்தம் வரை....

என்னிடம் புல்பவொரும் உண்டு....

புகார் சொல்வொரும் உண்டு.....

அவிந்தோ,அரிசியிட்டோ...

ஓரு நெய்வைத்தியம்....

அதனாலேயே ஓரு கூட்டம் சாத்தியம்....

நலம் நாடி நன்கொடையாய் பதிவு

செய்த தாள வாத்தியம்....

பூஜை நடக்கும்......

வேண்டுதல்கள் ஒலிக்கும்...

பக்தர்களின் கொடையில் பலபரீட்சை வலுக்கும்....

அவர்கள் வந்த இடமே அவர்களுக்கு மறக்கும்.....

இருப்பினும்.....

நான் இருப்பதால் குழந்தைகளுக்கோரு

ஆனந்தம்...

பிரசாத பந்தம்...

அவசரமாய் செல்வோருக்கு ஆண்டவன்....

அங்கலாய்த்து வருவோர்க்ககு ஆட்டிவைப்பவன்.....

 வழிகடந்து செல்வோர்க்கு அடையாளம்....

விழிநணைய பார்ப்போருக்கு அடைக்கலம்.....

காவல் காத்து நிற்போனுக்கு மனோபலம்......

தனைப் போலவே கடவுளும் என்ற எக்காளம்....

எப்டியோ

என்னை

வைத்தவனுக்கு புகழ்

வருபவனுக்கு அருள்....

எனக்கு.......

 

நான்தான் தெய்வமாயிற்றே........!

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.