(Reading time: 1 minute)

காதல் - கீர்த்தனா.ஆர்

love

காதல் -

விழியில் விழுந்து

இதயம் நுழைவதல்ல!!

விழி மூடும் வரையிலும்

அன்பாய் இணைந்து இருப்பதே!!

காதல் -

கைகள் கோர்த்து

தோள் சாய்ந்து நடப்பதுமல்ல!!

கடைசி வரையிலும் கைவிடாமல்

இன்பத்திலும் துன்பத்திலும்

தோள் கொடுப்பதே !!

காதல் -

கட்டி அணைத்து

முத்தமிடுவதுமல்ல!!

கடுங்கோபத்திலும்

சொற்போரில்

கண்ணியம் காப்பதே !!

மொத்தத்தில் காதல் -

இளமையில் புதுமையும்

முதுமையில் இனிமையும்

கொண்டதே !!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.