கோடையும் வாடையும்! - முஹம்மது அபூதாஹிர்

கொளுத்துகின்ற
கோடை வெயில்
கொடுமையானது !
அதைவிடை வரதட்சணையால்
பலபெண்கள் உயிரோடு கொளுத்தப்பட்டது
மிக கொடுமையானது!
வசந்த காலத்தின்
தென்றலைப் பார்க்க ஆசைப்பட்டவர்கள்
வரதட்சணை தீயின் வாடைக் காற்றில்
வாடி வருகிறார்கள் !
மே,ஜூன்,ஜூலை
வாடைக் காற்றால்
உடலெல்லாம் வியர்த்து விட்டது !
வரதட்சணையின் தீ ஜுவாலை
எமது சகோதரிகள் பலரின் உயிரை
கரித்து விட்டது !
எத்தனை டிகிரி
வெயிலடித்தாலும்
குறைவானது !
படித்த டிகிரிக்கு
வரதட்சணை வாங்குவதுதான்
மிகவும் மோசமானது !
கோடையின்
கத்திரி வெயிலடித்தது
வீட்டில் இருக்க முடிய வில்லை !
எங்கள் புத்திரிக்கு
திருமணம் நடந்தது
வீட்டை விற்காமல் இருக்க முடிய வில்லை !
அறுபது டிகிரி வெயிலடித்தால்
குளிர் பானம் குடிக்கலாம் !
அறுபது பவுன் வரதட்சணை கொடுத்தால்
அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது ?
பாரன்ஹீட்டை விட
படு வேகமாக உயர்கிறது
பவுன் ரேட்!
வெயில் கூட இறங்குகிறது
ஜீரோ டிகிரி
செல்சியசுக்கு!
பவுன் விலையோ
எகுறுகிறது
ஏழைகள் தொட முடியாத தூரத்திற்கு!
கோடையில்
குளிர்ச்சிக்கு
ஊட்டிக்கு போகிறார்கள் !
வரதட்சணை கொடுமையால்
வீட்டையே விற்றவர்கள்
எங்கே போவார்கள்?
மகனுக்கு நிலாவைக் காட்டும்
அன்பான அம்மாக்கள்
மாமியாராகும் போது
மருமகளுக்கு சூரியனாகி விடுகிறார்கள் !
தாய் பேச்சை
கேட்காத பிள்ளைகளும்
வரதட்சணை என வரும்போது
வாய் மூடி விடுகிறார்கள்!
பாலைவனத்தில்
நீர் அங்கே
இருப்பது போல் தெரிகிறது
ஆனால் அங்கே இருப்பது கானல் நீர் !
கலயாணத்தில்
இங்கே பெண்ணை பெற்றவர்கள்
சிரிப்பது போல் தெரிகிறது
அவர்களுக்குள் மறைந்திருப்பது கண்ணீர் !
கோடை மழை இன்று வரும்
வானிலை அறிக்கையால்
உள்ளம் குளிர்ந்தது !
“கொடுமையான வரதட்சணை,
இந்நிலை என்று மாறும் ?”
உள்ளம் கொதிக்கிறது !
கோடையின் வாடை காற்று !
காய்ந்து போகும் இலை!
தலை வலி, மயக்கம் என்ற நிலை !
அவை கொடியதல்ல வரதட்சணையை விட !
பெண் சிசுக்கொலை!
இளம் பெண்களின் தற்கொலை!
மாமியார்கள் செய்யும் ஸ்டவ் படுகொலை
இவைதான் கொடியது கோடையை விட !
கொதிக்கும் கோடையின்
அக்கினியின் கொடுமையை
குளிர்பானம் குடித்து தடுத்து விடலாம் !
கொதித்தெழு சகோதரா !
இந்த அக்கிரமத்தை எதிர்த்து!
நீ மனம் வைத்தால் வைத்தால் நிச்சயம் தடுத்து விடலாம் !
ஜில்லுனு ஒரு கல்யாணம் எப்போது ?
வரதட்சனை கொடுமை கோடை வெயிலுடன் ஓர் ஒப்பீடு
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.