(Reading time: 1 - 2 minutes)

“எய்ட்ஸ் “விழிப்புணர்வு! - முஹம்மது அபூதாஹிர்

aids 

“எய்ட்ஸ்” நச்சு மரத்தின்

வேர்களை விட்டு விட்டு

கிளைகளை மட்டும் வெட்டுவது

அது அழிந்திடவா வகை செய்யும்?

அல்ல !

      வளர்ந்திடவே வகை செய்யும்!

“எய்ட்ஸ்” நச்சுமரத்தின் வேர்களை

ஆழத்திலேயே வெட்டிடுங்கள்!

விழிப்புணர்வு முரசினை

விரைவாக கொட்டிடுங்கள் !

சிவப்பு விளக்கு பகுதிகளை

மூடுங்கள்!

சினிமாவில் ஆபாசத்தை

தடுங்கள் !

காம நாவல்களை

தீயிலிடுங்கள்!

எழுத்தில் காமன் வராமலிருக்க

வேலியிடுங்கள்!

பெண்களை மட்டும் “விபச்சாரி” என்று விலங்கிடும்

 

பாரபட்சத்தை விலக்கிடுங்கள் !

 

விபச்சார குற்றமிழைக்கும்

ஆண்களுக்கும் விலங்கிடுங்கள்!

ஆசைகளுக்கு

அணை போடுங்கள்!

அது இயலாவிடில்

இல்லற வாழ்விற்கு துணை தேடுங்கள் !

மன இச்சைப்படி

வாழ்வதை விடுங்கள் !

மனசாட்சிப்படியே

எப்பொழுதும் நடங்கள் !

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.