(Reading time: 2 - 3 minutes)

நன்றிக்கடனை மகன் தீர்த்துக் கொண்டான்! - முஹம்மது அபூதாஹிர்

mom 

வரலாற்றின் சாட்சியாம் அருங்காட்சியகங்களில்

பழைய பொருட்களை கூட

பாதுகாக்கிறார்கள் !

சமூகத்தின் சாட்சிகளான

முதியவர்களை இவர்கள்

ஒதுக்குகிறார்கள்!

 

நவீனம்

அதி நவீனம்

உயரமான கட்டிடங்கள் !

ஈனம்

மிக ஈனம்

முதிவர்கள் அங்கு இல்லை, அவை வெற்றிடங்கள்!

 

 

கொஞ்சி கொஞ்சி உணவூட்டிய அன்னை

ஒரு வேளை உணவுக்கு கெஞ்சுகிறாள்!

அன்போடு அரவணைத்த அன்னை

அவனிடமே பேச அஞ்சுகிறாள்!

 

குட்டி தாய் பசுவை விட்டு

பிரிக்கப்பட்டது!

குழந்தைகள்

தாயை விட்டுப்  பிரிந்து விட்டார்கள்!

 

பத்து மாதம்

கருவில் சுமந்து பெத்தவள்!

இன்றுதான்  வலியை உணர்ந்தாள்!

தான் தெருவில் விரட்டப்பட்டபோது !

 

அவனுக்கு

பாலும் அமுதும்

அன்னை அளித்த சொத்து!

வீடு வாசல்

தந்தை கொடுத்த சொத்து!

நன்றிக்கடனை மகன் தீர்த்துக் கொண்டான்

முதியோர் இல்லத்தில் சேர்த்து !

 

நடக்கக் கற்றுக் கொடுத்தவளுக்கு

இன்று நடக்க முடியவில்லை!

பேசக் கற்று கொடுத்தவளுக்கு

இன்று பேச முடியவில்லை!

எனினும் நன்றிக் கெட்ட மகன்

உதவ முன் வர வில்லை!

 

எத்தனையோ தடவை மகனின் அழுகையை

சேலைத்தலைப்பால் துடைத்தவள் இன்று அழுகையோடு !

அவனின் துணிகளை துவைத்தவள்

இன்று  துணி அழுக்கோடு!

மகன் உதறி தள்ளினான்

மனைவியோடு சேர்ந்து மிடுக்கோடு !

 

நாய் வாலாட்டி நன்றி தெரிவிக்கிறது  

இவன் போட்ட ஒரு எலும்புக்கு!

தாய்க்கு நன்றி பகர மறந்தான்

பாலூட்டி அவள் வலு சேர்த்த இவன் உடம்புக்கு !

 

பொறு சிறிது காலம் வரைக்கும்!

ஆம் உனது  முடிகள் நரைக்கும்!

அப்போது உனக்கும் உரைக்கும்!

 

அப்போது நீ உணருவாய்!

உன்னால் எதுவும் செய்ய முடியாமல் திணருவாய்!!

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.