என்ன பொருத்தம்? - வின்னி

எனக்கும் அவனுக்கும் என்ன பொருத்தம்?
நான் விரும்புவது சூடானபானங்கள், அவன் விரும்புவது குளிரானவை.
நான் தேனீரைச் சுடச் சுடக் குடிப்பேன், அவன் குடிப்பது ஆற வைத்து!
நான் வெக்கையில் வேர்க்கிறது என்று சொன்னால், "எனக்கு குளிராக இருக்கிறது" என்பான்.
நான் பாலை விரும்புவதில்லை அவனுக்கு அதிக பால் வேணும்.
நான் தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சிகள் அவனுக்கு பிடிக்காது.அவன் பார்க்கும் நிகழ்ச்சிகள் எனக்குப் பிடிக்காது.
நான் ரசிப்பது நகைச்சுவை படங்கள், அவன் பார்த்து ரசிப்பது பயங்கரப் படங்கள்.
நான் விரும்புவது கர்நாடக சங்கீதம், சினிமாப் பாட்டென்றால் அவனுக்கு உயிர்!
நான் விரும்புவது காதல் கதைகள், அவன் மூழ்குவதோ மர்மக் கதைகளில்.
நான் நன்றாக யோசித்துத்தான் பதில் சொல்வேன், அவன் உண்மையை உள்ளபடி உடனே சொல்லி விடுவான்!
நான் விரும்புவர்களை அவனுக்குப் பிடிக்காது.
புகை பிடிப்பவர்கள் அவனுக்கு எதிரிகள், நான் அவர்களை சகித்துக் கொள்வேன்.
நான் மாமிசம் சாப்பிடுபவள், அவனோ சைவ உணவு உண்பவன்.
அவனுக்கு செல்லப் பிராணிகளைப் பிடிக்கும், நான் அவனுக்காக அவற்றை விரும்புபவள்.
நான் சிங்கம், அவன் தேள், நான் சொல்லவில்லை ஜாதகம் சொல்கிறது
நான் சொல்வதற்கு எல்லாம் அவன் எதிர்மாறு!
இதற்கு மேல் சொல்ல ,எமக்கிடையே இன்னும் அநேக வித்தியாசங்கள்! நான் சொன்னால் வீட்டில் போர்!
எனக்கும் அவனுக்கும் தொண்ணூறு வீதம் பொருத்தம் என்றார், எமது ஜாதகத்தைப் பொருத்தம் பார்த்தவர்.
ஆனால் எமக்குள் பொருந்துவது பத்து வீதம் மாத்திரமே, என்பது எனது கணிப்பு!
சாதகமாகப் பார்ப்பதுதான் ஜாதகம் போலும்!
ஐம்பது வருடங்கள் வாழ்ந்து விட்டேன் அவனுடன், இனிச் சொல்ல முடியுமா காதலிப்பதே மேல் என்று?
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.