(Reading time: 1 - 2 minutes)

நான் ஏமாறவில்லை - வின்னி

TV

வேலையற்ற இளைஞன் நீ,   

இரக்கப்பட்டேன் உனக்காக.

நான் தந்தேன், உனக்கு வேலை,

நீ செய்யவில்லை, அதை ஒழுங்காக.

நிறையப் பணம் தந்தேன், உன் உழைப்புக்கு,

ஓடி விட்டாய் என் பணத்துடன்.    

 

உன் உழைப்பைச் சரியாகச்

செய்யவில்லை என்றேன் நான்,

ஏற்கவில்லை நீ அதை.

நீ செய்ததோ தரம் குறைந்த வேலை,

நான் தந்ததொ என் உழைப்பின் வேர்வை,

நீ தந்ததொ என் இதயத்தில் ஒரு வடுவை!

 

உடைத்து விட்டாய் என் டீ.வீ .

நான் இழந்ததோ ஒரு டீவீ,

நான் விரும்பும், ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’.

இனி இல்லை உனக்கு வேலை,

இக் கிழவனின் சிபாரிசு!.

இழந்துவிட்டாய் பல வேலை வாய்ப்பை.

 

நீ இழந்ததோ உன் பிழைப்பை,

உழைப்பின் பெருமையை,

உன் எதிர்காலத்தை,

என் மதிப்பை!

 

பார்ப்பதற்கு இல்லை டீ.வீ, ஆனால்,

மன்னித்து விட்டேன் உன்னை நான்.

படித்து விட்டேன், இவ்வயதில், நல்ல பாடம்.

 

என் மகளும் தருவதாகச் சொல்லிவிட்டாள், புது டீ.வீ.

நான் ஏமாறவில்லை,

ஏமாந்தவன் நீதான் இளைஞனே!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.