(Reading time: 1 - 2 minutes)

பருவநிலை என்னை வாட்டுகிறது - வின்னி

Weather

கடும் வெயில் என் கண்ணைக் குத்த வைக்க

கடும் மழை என் உடலை நனைய வைக்க

கடும் குளிர் என் எலும்பை உறைய வைக்க

கடும் பனி என்னை வழுக்கி விழ வைக்க

 

கதிரவனை மறைக்க, கறுப்புக் கண்ணாடி தேடுகிறேன்

மழைத் துளியைத் தடுக்க, மலைபோல் குடை தேடுகிறேன்

உடலை குளிரில் ஒளிக்க, தடித்த மேலாடை தேடுகிறேன்

உறைந்த பனி படர்ந்த தெருவில் நடக்க,  காலனி தேடுகிறேன்  

 

மாறி மாறி வரும், வெயில், மழை,,குளிர், பனி,

இந்தக் கனடா பருவநிலை மாற்றம் என்னை வாட்டுகிறது!   

 

நான் ஏன் பறவையாகப் பிறக்கவில்லை?

பருவ நிலைக்கேற்பப் பறந்து திரிய!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.