நினைவுகள் - அஹல்யா
முகத்தில் பளாரென்று விழுந்த
குளிர்ந்த நீர்த்துளிகளாய் ஊூடுறுவி
அடித்துப் பெய்யும் மழையின்
ஆரம்ப ஓசையாய் அலப்பரித்து
சிலிர்த்துச் செல்லும் காற்றின்
சில நிமிட ஓசையாய்...
தூசியினால் மூடும் இமைக்கும் நொடிகளில்
இதயத்தில் நுழைந்து இறுக்கமாய் இறுகிவிடும்....
சில நினைவுகள்.......
வலியினால் வழித்தெறிய விரும்பினாலும்
வகை தெரியாமல் வழக்கமாக்கி விட்டேன்
அனுதினமும் அசைபோடுவதை.......
{kunena_discuss:779}