(Reading time: 1 - 2 minutes)

நம்பிக்கை - சுஜி பிரபு

Nambikkai

கனவிலும் நனவிலும்

உன் நினைவு தான்  எனக்கு...

மலரின் மென்மையிலும்

இனிய இசையிலும்

காதலன் சிரிப்பினிலும்

உன்னையே தேடுகிறது என் மனம்.....

ஒரு நாள் தள்ளிச் சென்றாலும்

எனக்குள் உன் வருகையோ

என குதூகலிக்கிறேன்.....

ஆனால் ஏமாற்றங்கள்

மட்டுமே என் வாழ்வில் ....

சேயென என்னை மடி

தாங்கும் கணவன் இருப்பினும்

அவனிலும் உன்னையே தேடுகிறேன்...

ஆயிரம் ஆசைகள் நிறைவேறினாலும்

நீ இல்லாத

வெறுமையே மனதை நிறைக்கிறது ......

எனக்குள்ளே ஒடுங்கி விட்ட

என்னை உயிர்ப்பிக்க

உன் மழலையால் மட்டுமே முடியும்......

எதிலும் பிடிப்பில்லை என்றாலும்

என்னவனின் மகிழ்ச்சிக்காகவே

என்றேனும் என்னிடம்

வந்து சேரும்  உன்

வரவை எதிர்பார்த்து அந்த

நம்பிக்கையில் கடக்கின்றேன்

என் நாட்களை.............

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.