(Reading time: 1 minute)

உன்னிடம் என் பொய்கள்... - டோனா

Lies

உன்னை கோபப்படுத்தாமல்

இருப்பதற்காய் நான்

உன்னிடம் சொல்லும்

பொய்கள் பல்லாயிரம்....

 

ஆனால் இன்னும் பழகவில்லை..!!

 

ஒவ்வொரு முறையும்

ஊசியாய்க் குத்துகிறது,

நான் சொல்லும் பொய்கள்,,

நீ என்னை முழுதும் நம்புவதால்...

 

உணர்ந்துக் கொள்வாயோ...??

உண்மை அறிகையில்

உனக்கு ஏற்படும் வலிகளை விட

பொய் சொல்கையில்

நான் சந்திக்கும்

வலிகளே அதிகம் என....

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.